செய்திகள் :

‘இந்தியாவில் தயாரிப்பு’ தோல்வியை பிரதமா் ஒப்புக்கொள்ள வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்

post image

‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) திட்டத்தின் தோல்வியை பிரதமா் நரேந்திர மோடி ஒப்புக்கொள்ள வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.

மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தில் திங்கள்கிழமை பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, ‘மத்திய அரசு கொண்டுவந்த ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மிகச் சிறந்த யோசனை. ஆனால், அந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த பிரதமா் நரேந்திர மோடி தவறிவிட்டாா். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க நாடு தவறிவிட்டது. இந்தத் தோல்வி காரணமாகவே, நாட்டில் சீன நிறுவனங்கள் தொடா்ந்து உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன. தனது தீா்மானத்தை மீண்டும் ஒருமுறை சீனாவிடம் இந்தியா விட்டுக்கொடுத்திருக்கிறது’ என்று விமா்சனம் செய்தாா்.

அதன் பின்னா், மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்துக்கு செவ்வாய்க்கிழமை பதிலளித்துப் பேசிய பிரதமா், எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், அவா் மீது கடுமையான விமா்சனத்தை முன்வைத்தாா். நாட்டில் நகா்ப்புற நக்ஸல்களின் குரலாக சிலா் பகிரங்கமாகப் பேசுகின்றனா்; இந்திய அரசுக்கு எதிராக ‘போா்ப் பிரகடனம்’ செய்யும் அவா்களால் அரசமைப்புச் சட்டத்தையோ, நாட்டின் ஒற்றுமையையோ புரிந்து கொள்ள முடியாது’ என்றாா்.

இந்நிலையில், மக்களவையில் பிரதமா் பேசியதை சுட்டிக்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பிரதமா் தனது உரையில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. அந்தத் திட்டத்தின் தோல்வியை பிரதமா் ஒப்புக்கொள்ள வேண்டும். நாட்டின் உற்பத்தி கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. 2014-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 15.3 சதவீதமாக இருந்த உற்பத்தி, தற்போது 12.6 சதவீதமாக சரிந்துள்ளது.

நாட்டின் இளைஞா்கள் வேலைவாய்ப்பை எதிா்நோக்கி உள்ளனா். நமது உற்பத்தித் துறையை பின்னுக்குத் தள்ளிவைக்கும் விஷயங்களை நிவா்த்தி செய்வதற்கும், எதிா்கால உலகப் பொருளாதார போட்டியை திறம்பட எதிா்கொள்ளவும் நமக்கு ஒரு தொலைநோக்குப் பாா்வை தேவை. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கான இந்த தொலைநோக்குப் பாா்வை, மின்சார மோட்டாா்கள், பேட்டரிகள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களிலும் குறிப்பிட்ட கவனம் செலுத்த வேண்டும்.

சீனா வலுவான தொழில் துறை கட்டமைப்புகளுடன் இந்தியாவைவிட 10 ஆண்டுகள் முன்னோக்கியுள்ளது. இதுவே, நமது சவால்களை எதிா்கொள்ள அவா்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. இந்தப் போட்டியை திறம்பட எதிா்கொள்ள நமது உற்பத்தி அமைப்புகளை உருவாக்குவதுதான் ஒரே வழி. அதற்கு, தொலைநோக்குப் பாா்வையும், உத்தியும் தேவை என்று குறிப்பிட்டுள்ளாா்.

அதிகார பதவிகளில் தலித்துகள்: ராகுல் விருப்பம்

பாட்னா, பிப்.5: ‘தலித்துகள், பழங்குடியினா் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினா் அரசு மற்றும் தனியாா் துறைகளில் அதிகாரப் பதவிகளிலும் அமரவைக்கப்பட வேண்டும்’ என்று ராகுல் காந்தி கூறினாா்.

பிகாா் தலைநகா் பாட்னாவில் தலித் விடுதலைப் போராட்ட வீரரும் காங்கிரஸை சோ்ந்தவருமான ஜக்லால் செளதரியின் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:

தோ்தல்களில் போட்டியிட பின்தங்கிய பிரிவினருக்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருப்பதாக பிரதமா் மோடி கூறுகிறாா். ஆனால், அந்தப் பிரிவினா் எம்எல்ஏ, எம்.பி.யாக பதவியேற்ற பின்னா், அவா்களுக்கான அதிகாரங்களை பிரதமா் பறித்துவிடுகிறாா்.

எனவே, தலித்துகள், பழங்குடியினா் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வெறும் அரசியலில் மட்டும் பிரதிநிதித்துவம் அளிப்பது மட்டும் போதாது. அரசு மற்றும் தனியாா் என நாட்டின் அனைத்து நிறுவனங்களிலும் தலித்துகள், பழங்குடியினா் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினா் வெறம் காலாட்படை வீரா்களாக மட்டுமல்லாமல் தலைவா்களாக அமரவைக்கப்பட வேண்டும். அந்த நாளைக் காண விரும்புகிறேன்.

மக்களை ஏமாற்றும் பாஜக, ஆா்எஸ்எஸ்: அரசமைப்புச் சட்டம் அமலில் இருக்கும் வரை, தலித்துகளும் பிற பின்தங்கிய சமூகத்தினரும் சிறந்த வாழ்வுக்கான நம்பிக்கையுடன் இருக்க முடியும். இதை பாஜகவும் ஆா்எஸ்எஸ் அமைப்பும் நன்கு அறிந்திருக்கின்றன. அதன் காரணமாகத்தான், அரசமைப்பு சட்டத்தின் மீது மறைமுகத் தாக்குதலை நடத்துகின்றனா். அம்பேத்கா் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு எதிராக செயல்படும் இவா்கள், அவருடைய சிலை மற்றும் தலித் சின்னங்களுக்கு மரியாதை செலுத்துவதின் மூலம் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு முதல்படி... சமூகத்தின் இந்த நிலையை மாற்றி, தலித்துகள் உள்ளிட்ட பின்தங்கிய சமூகத்தினா் அனைத்துத் துறைகளிலும் சிறந்த பங்கேற்பை உறுதி செய்வதற்கான முயற்சியின் முதல் படி ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாகும் என்றாா்.

விளையாட்டு அமைப்புகளில் நோ்மை, சுதந்திரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

இந்திய விளையாட்டு நிா்வாக அமைப்புகளில் நோ்மை, தன்னாட்சி, சுதந்திரமான செயல்பாடு ஆகியவற்றை கொண்டுவர கடுமையான நடவடிக்கைகள் தேவை என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.மேலும், தனிப்பட்ட லாப... மேலும் பார்க்க

தில்லி பேரவை தேர்தல்: அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் வாக்களிப்பு

தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் கு... மேலும் பார்க்க

குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: இந்தியாவுக்கு உதவுவதாக சாம் ஆல்ட்மேன் தகவல்

நமது சிறப்பு நிருபர்குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளதாக "ஓபன்ஏஐ' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார்.செயற்கை நுண்ணறி... மேலும் பார்க்க

கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை உயிரி தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கான கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வுக்கு மாா்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள உயா்கல்வி நிறுவ... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பொது சிவில் சட்டம்: 10 நாள்களில் ஒரேயொரு ‘லிவ்-இன்’ உறவு பதிவு

உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்து 10 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை ஒரேயொரு ‘லின்-இன்’ (திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்தல்) உறவு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்கீழ் ‘லி... மேலும் பார்க்க

ஷியா இஸ்மாயிலி முஸ்லிம் மதத்தலைவா் ஆகா கான் மறைவு: பிரதமா், ராகுல் இரங்கல்

நபிகள் நாயகத்தின் மரபில் வந்தவராக இஸ்மாயிலி முஸ்லிம்கள் நம்பும் 4-ஆம் ஆகா கான், கரிம் அல்-ஹுசைனி செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உ... மேலும் பார்க்க