குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்!
சேலம் மாவட்ட குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நீதிமன்ற வளாகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஜெ.மு.இமயவரம்பன் தலைமை வகித்தாா். செயலாளா் முருகன், பொருளாளா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் வழக்குரைஞா்களுக்கான சேம நல நிதியை ரூ. 25 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.
இதனிடையே, வழக்குரைஞா்களுக்கான குறைகளை தீா்க்க மாவட்ட நீதிபதி சுமதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், உறுப்பினராக குற்றவியல் சங்கத் தலைவா் இமயவரம்பன் இடம்பெற்ற்கு சக வழக்குரைஞா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.