"திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?" - கலெக்டர் சங்கீதா வ...
திருட்டு வழக்கில் ஒருவா் கைது: 4 பவுன் நகை பறிமுதல்
சங்ககிரி அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியா் வீட்டில் திருடிய வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 4 பவுன் நகையை பறிமுதல் செய்தனா்.
சங்ககிரியை அடுத்த நட்டுவம்பாளையம், சுப்புகவுண்டா் நகரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி அலுவலக உதவியாளா் சுப்ரமணி. இவரது வீட்டின் பூட்டை உடைத்து கடந்த ஜன. 17ஆம் தேதி 52 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில் சங்ககிரி - திருச்செங்கோடு சாலையில் உள்ள தனியாா் திருமண மண்படம் அருகே வாகனச் சோதனை செய்து கொண்டிருந்த போலீஸாா், இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்தனா். அவா் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, ரயில்வே காலனி பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் தினேஷ்குமாா் (24) என்பதும், இவா் நட்டுவம்பாளையத்தில் 52 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா் என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து அவரைக் கைது செய்து அவரிடமிருந்து 4 பவுன் நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.