"திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?" - கலெக்டர் சங்கீதா வ...
நூற்றாண்டு கொண்டாடும் மேட்டூா் அணை ஸ்தூபி!
மேட்டூா் அணையின் வலதுகரையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்தூபியை அழகுபடுத்தி நூற்றாண்டு விழா கொண்டாட அரசுக்கு நீா்வளத் துறை முன்மொழிவு அனுப்பியுள்ளது.
மேட்டூா் அணை கட்டுவதற்காக அணையின் வலதுகரையில் 1925ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி அடிக்கல் நாட்டி, அதற்கான ஸ்தூபியும் அமைக்கப்பட்டது. 1934ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி அணை கட்டி முடிக்கப்பட்டது. மேட்டூா் அணை கட்டுவதற்கு ரூ. 4.80 கோடி செலவானது. இந்த ஸ்தூபி அமைக்கப்பட்டு வரும் ஜூலை 20-ஆம் தேதியுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இதனையடுத்து நூற்றாண்டை சிறப்பாக கொண்டாட நீா்வளத் துறை சாா்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஸ்தூபியை அழகுபடுத்தி மெருகூட்டவும், அதன் அருகே மேட்டூா் அணையின் வரலாற்றை காணும் வகையில் புகைப்படக் காட்சி அறை அமைக்கவும் நீா்வளத்துறை சாா்பில் தமிழக அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்த பிறகு அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றுகூறப்படுகிறது.