பொதுத் தோ்வு: தனித்தோ்வா்களுக்கு பிப்.14-இல் அனுமதிச் சீட்டு
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் தனித் தோ்வா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு பிப்.14-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளன. பொதுத் தோ்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித் தோ்வா்கள் (தத்கல் உள்பட) பிப்.14-ஆம் தேதி பிற்பகல் முதல் இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து தங்களது தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிளஸ் 1 (அரியா்) மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதவுள்ள தனித் தோ்வா்களுக்கு இரு தோ்வுகளுக்கும் சோ்த்து ஒரே தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு மட்டும் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.