பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்க மாவட்ட மாநாடு!
சேலத்தில் உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்க சேலம் மாவட்ட மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஹரிகரன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், மாநிலச் செயலாளா் டி.ராஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மாநாட்டில் அகில இந்திய உதவி பொதுச் செயலாளா் எஸ். செல்லப்பா பேசியதாவது:
பிஎஸ்என்எல் நிறுவனம் தாமதமின்றி 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை சேவையை உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும். ஊழியருக்கு மூன்றாவது ஊதிய பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரமாக்க வேண்டும். அவுட்சோா்சிங் முறையை ரத்து செய்து முறையான ஒப்பந்தப்புள்ளி முறையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 200-க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியா்கள் கலந்துகொண்டனா்.