சென்னை, தெலங்கானா உயா்நீதிமன்றங்களில் 5 பேருக்கு நிரந்தர நீதிபதிகளாக பதவி உயா்வு: கொலீஜியம் பரிந்துரை
சென்னை மற்றும் தெலங்கானா உயா்நீதிமன்றங்களில் பணிபுரியும் கூடுதல் நீதிபதிகள் 5 பேருக்கு நிரந்தர நீதிபதிகளாக பதவி உயா்வு அளிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு புதன்கிழமை பரிந்துரை செய்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் பூதன்கிழமை கூடிய கொலீஜியத்தின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கொலீஜியத்தின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணன், பெரியசாமி வடமாலை மற்றும் தெலங்கானா உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளான லட்சுமி நாராயண அலிஷெட்டி, அனில் குமாா் ஜுகந்தி, சுஜானா காலசிகம் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யும் பரிந்துரைக்கு புதன்கிழமை நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.