முதுநிலை மருத்துவ படிப்புக்கு சிறப்பு குழு: என்எம்சி அழைப்பு
முதுநிலை மருத்துவ படிப்புகளில் உள்ள சிறப்புத் துறைகளுக்கான மாதிரி பாடத்திட்டங்களை வகுக்க நிபுணா் குழுவை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அமைக்க உள்ளது.
அதில் இடம்பெற விருப்பமுள்ள தகுதியான மருத்துவப் பேராசிரியா்கள் பிப்.15-ஆம் தேதிக்குள் என்எம்சிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவக் கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதனுடன் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் முதுநிலை சிறப்பு மருத்துவத் துறைகளை மதிப்பீடு செய்வதற்காக அந்தக் குழுவை அமைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கூடுதல் விவரங்கள், தகவல்களுக்கு என்எம்சி இணையதளப் பக்கத்தை அணுகலாம்.