டி20 தரவரிசையில் அசத்தும் தமிழன்..! நூழிலையில் முதலிடத்தை இழந்த வருண் சக்கரவர்த்தி!
தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஐசிசி டி20 தரவரிசையில் 3ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்து உடனான டி20 தொடரில் 14 விக்கெட்டுகள் எடுத்த வருண் சக்கரவர்த்தி தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார்.
இந்தச் சிறப்பான செயல்பாடுகளின் மூலமாக இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரிலும் சேர்க்கப்பட்டுள்ளார். ஐசிசி தரவரிசையிலும் 3ஆம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
இந்திய அணி 4-1 என தொடரை வென்றது. ஒருநாள் போட்டிகள் நாளை (பிப்.6) முதல் தொடங்குகின்றன.
ஐசிசி டி20 தரவரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் அகில் ஹொசைன் 707 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
இதற்கு முன்பு முதலிடத்தில் ஆடில் ரஷித் இந்தியாவுடனான சுமாரான பந்துவீச்சினால் 2ஆம் இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளார். இவரும் வருண் சக்கரவர்த்தியும் 705 புள்ளிகளுடன் இருக்கிறார்கள்.
வருண் 3 புள்ளிகளில் முதலிடத்தினை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டி20 பந்துவீச்சு தரவரிசைப் பட்டியல்
1. அகில் ஹொசைன் - 707 புள்ளிகள்
2. ஆடில் ரஷித் - 705 புள்ளிகள்
3. வருண் சக்கரவர்த்தி - 705 புள்ளிகள்
4. வனிந்து ஹசரங்கா - 698 புள்ளிகள்
5. ஆடம் ஸாம்பா - 694 புள்ளிகள்