செய்திகள் :

காயத்தால் விலகிய மார்ஷுக்கு பதிலாக பிக்-பாஸ் நாயகன்! ரிக்கி பாண்டிங் பரிந்துரை!

post image

காயத்தால் விலகிய மார்ஷுக்கு பதிலாக பிக்-பாஸ் நாயகனான இளம்வீரரை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பரிந்துரைத்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக இளம் வீரர் ஒருவரை ஆஸ்திரேலிய அணிக்கு 3 உலகக் கோப்பைகளை வென்று தந்த முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பரிந்துரைந்துள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 19 ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்தியாவுக்கானப் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸின் காயம், மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் காயம் ஆகியவை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பயிற்சியாளர் மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.

முதுகு வலி காரணமாக போட்டியில் இருந்து விலகிய மார்ஷுக்குப் பதிலாக பிப்ரவரி 12 ஆம் தேதிக்குள் மாற்று வீரர் ஒருவரை இறுதி செய்து 15 பேர் கொண்ட இறுதி அணியை ஐசிசிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்...நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநருடன் ராகுல் டிராவிட் வாக்குவாதம்!

சாம்பியன்ஸ் டிராபி அணியில் மார்ஷை சேர்த்த ஆஸ்திரேலியா, இன்னும் ஒரு மாற்று வீரருக்கான பெயரை குறிப்பிடவில்லை. ஆனால், ரிக்கி பாண்டிங் புதிய ஆல்ரவுண்டரான மிட்செல் ஓவனை மார்ஷுக்குப் பதிலாக சேர்க்க பரிந்துரைத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த டி20 பிக் பாஷ் போட்டியில் 39 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசிய மிட்செல் ஓவன் 452 ரன்களுடன் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தார். மேலும், இவர் இந்தத் தொடரில் இரண்டு சதங்கள் விளாசியிருந்தார். அதுமட்டுமின்றி மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன்மூலம் எஸ்ஏ20 லீக்கில் பார்ல் ராயல்ஸுடன் ஒப்பந்தத்தையும் பெற்றுள்ளார்.

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில், “மிட்செல் ஓவன் அதிரடி பேட்டர் மட்டுமின்றி ஆல்ரவுண்டரும்கூட. மிட்செல் மார்ஷுக்கு மாற்றாக அவர் மிகவும் பொருத்தமானவராக இருப்பார்” எனத் தெரிவித்தார்.

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்றுவீரர்களாக ஆரோன் ஹார்டி மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் உள்ளனர். இருவர்கள் இருவரும் காயத்தில் இருந்து மீண்டு வந்துகொண்டிருக்கின்றனர். ஒருவேளை இவர்கள் அணிக்குத் திரும்ப முடியாத பட்சத்தில் மிட்செல் ஓவனுக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்...கம்மின்ஸ் காயம்: சாம்பியன்ஸ் டிராபி ஆஸி. அணியின் புதிய கேப்டன் யார்?

38 இடங்கள் முன்னேறி 2ஆம் இடம் பிடித்த அபிஷேக் சர்மா..! ஐசிசி டி20 தரவரிசையில் அசத்தல்!

ஐசிசி ஆடவர் டி20 தரவரிசையில் 38 இடங்கள் முன்னேறி 2ஆம் இடம் பிடித்துள்ளார் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா. இங்கிலாந்து உடனான 5ஆவது டி20 போட்டியில் அதிரடியாக சதமடித்த அபிஷேக் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தா... மேலும் பார்க்க

கம்மின்ஸ் காயம்: சாம்பியன்ஸ் டிராபி ஆஸி. அணியின் புதிய கேப்டன் யார்?

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தனது கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயத்தால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதனால் ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப... மேலும் பார்க்க

சென்னை சிங்கம்ஸ் அதிரடி வெற்றி

ஐஎஸ்பிஎல் தொடரின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் ஃபால்கன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை சிங்கம்ஸ். தெருவோர சிறுவா்களின் திறமையை மேம்படுத்தும் வகையில் டி... மேலும் பார்க்க

வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து சிறப்பாக செயல்படும்: கெவின் பீட்டர்சன்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும... மேலும் பார்க்க

விராட் கோலி, ரோஹித் சர்மா ரோபோக்கள் அல்ல; முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆதரவு!

விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் ரோபோக்கள் அல்ல என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந... மேலும் பார்க்க

ஜாக்ஸ் காலிஸ்தான் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட்டர்..! ரிக்கி பாண்டிங் புகழாரம்!

தி ஹைவி கேம்ஸ் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரிக்கி பாண்டிங் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக்ஸ் காலிஸ்தான் உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட்டரென புகழ்ந்து பேசியுள்ளார்.இந்தியாவின் நட்சத... மேலும் பார்க்க