செய்திகள் :

ஸ்குவிட் கேம் - 3 வெளியீட்டுத் தேதி!

post image

பிரபல கொரியன் இணையத் தொடரான ஸ்குவிட் கேம் மூன்றாவது சீசன் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல கொரியன் இயக்குநர் கவாங் டோங்யுக் இயக்கத்தில் லீ ஜங் ஜே, பார்க் கே சூ, வி கா ஜோன் ஆகியோர் நடித்து கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்குவிட் கேம் பாகம் 1 வெளியானது.

இந்தத் தொடரில் கடனில் இருப்பவர்களிடம் பேசி ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறார்கள். விளையாட ஒப்புக் கொள்கிறவர்களை அடையாளம் தெரியாத இடத்தில் அடைத்து வைத்து ஒரு குழு விளையாட்டை நடத்துகிறது.வெற்றி பெறுபவர்களுக்கு பெருந்தொகை வழங்கப்படும், மாறாக தோற்றால்? விதவிதமாக கொல்லப்படுகிறார்கள்.

இதையும் படிக்க: கவினின் மாஸ்க் வெளியீடு எப்போது?

அடுத்தடுத்து திருப்பங்கள் யாரும் ஊகிக்க முடியாத வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதையால், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இந்தத் தொடருக்கு தமிழகம் இன்றி, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ஸ்குவிட் கேம் 2-வது சீசன் உருவானது. அண்மையில், வெளியான இந்த சீசனும் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், ஸ்குவிட் கேம் - 3 இந்தாண்டு ஜூன் 27 ஆம் தேதி வெளியாகும் என்றும் இதுவே இறுதி சீசன் எனவும் நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது.

கால்பந்து பிரபலங்கள் மூவர் பிறந்தநாள்..! ஃபிபாவின் நாட்டு நாட்டு போஸ்டருக்கு ஜூனியர் என்டிஆர் பதில்!

பிறந்தநாள் கொண்டாடும் கால்பந்து பிரபலங்கள் மூவருக்கு ஃபிபா ஆர்ஆர்ஆர் பட பாணியில் போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதற்கு ஜூனியர் என்டிஆர் பதில் அளித்ததும் வைரலாகி வருகிறது. ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தின் ... மேலும் பார்க்க

யுவன் - ரியோ ராஜின் ‘ஸ்வீட் ஹார்ட்’ வெளியீட்டுத் தேதி!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதுடன் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் பியார் பிரேம காதல், ஹை ஆன... மேலும் பார்க்க

ஆர்யன் கான் இயக்கும் இணையத் தொடர் பெயர்!

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் இயக்கும் இணையத் தொடரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன் கான். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் போதைப் பொருள... மேலும் பார்க்க

500 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகும் புது வசந்தம் தொடர்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் புது வசந்தம் தொடர் 500 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஷியாம் மற்றும் சோனியா சுரேஷ், வைஷ்ணவி ஆகியோர் இத்தொடரில் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.... மேலும் பார்க்க

தெலுங்கில் தோல்வியடைந்த மத கஜ ராஜா!

நடிகர் விஷால் நடித்த மத கஜ ராஜா திரைப்படம் தெலுங்கில் கவனம் பெறவில்லை.இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் 12 ஆண்ட... மேலும் பார்க்க

கவினின் மாஸ்க் வெளியீடு எப்போது?

நடிகர் கவின் நடித்த மாஸ்க் திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கவின் ஸ்டார் படத்திற்குப் பின் பிளடி பெக்கர் படத்தில் நடித்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிதாக வணி... மேலும் பார்க்க