திருப்பதி உண்டியல் காணிக்கை: தொடர்ந்து 35-ஆவது மாதமாக ரூ.100 கோடியைக் கடந்தது!
ஆர்யன் கான் இயக்கும் இணையத் தொடர் பெயர்!
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் இயக்கும் இணையத் தொடரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன் கான். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சர்ச்சைக்கு ஆளானார். பின், ஐபிஎல் அணி வீரர்களைத் தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
தொடர்ந்து, அடுத்தக்கட்டமாக இணையத் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார்.
இதையும் படிக்க: தெலுங்கில் தோல்வியடைந்த மத கஜ ராஜா!
இந்த இணையத் தொடரில் ஆர்யன் கானின் சகோதரி சுஹானா கான், அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தா நந்தா, நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கும் இத்தொடரை நெட்பிளிக்ஸ் ஓடிடி வெளியிடுகிறது. தற்போது, இத்தொடருக்கு ’தி பேட்ஸ் ஆஃப் பாலிவுட்’ (the ba***ds of bollywood) எனப் பெயரிட்டுள்ளனர். இதற்கான, புரமோ விடியோவில் ஷாருக்கான் தொடர் குறித்த அறிமுகத்தைக் கொடுத்துள்ளார்.