செய்திகள் :

யுவன் - ரியோ ராஜின் ‘ஸ்வீட் ஹார்ட்’ வெளியீட்டுத் தேதி!

post image

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதுடன் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் பியார் பிரேம காதல், ஹை ஆன் லவ், விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.

பியார் பிரேம காதல் படத்தைத் தவிர மற்ற படங்கள் வணிக ரீதியான வெற்றியைப் பெறவில்லை என்றாலும் தயாரித்த அனைத்து படங்களும் ரசிக்கக்கூடிய வகையிலேயே உருவாகியிருந்தன.

இதையும் படிக்க: ஆர்யன் கான் இயக்கும் இணையத் தொடர் பெயர்!

தற்போது, யுவனின் ஒய்எஸ்ஆர் (YSR) நிறுவனம் ஸ்வீட் ஹார்ட் படத்தை தயாரித்து வருகிறது. இதில், நாயகனாக நடிகர் ரியோ ராஜ் நடிக்க அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்குகிறார்.

காதல் திரைப்படமாக உருவாகும் இதில் கோபிகா ரமேஷ் நாயகியாகவும் ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலம், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், இப்படம் மார்ச் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி உண்டியல் காணிக்கை: தொடர்ந்து 35-ஆவது மாதமாக ரூ.100 கோடியைக் கடந்தது!

திருப்பதி: திருமலை வெங்கடாசலபதி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை தொகையாக கடந்த டிசம்பர் வரையிலான 34 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ரூ. 100 கோடிக்கும் மேல் வருவாய் பெறப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாத உண்டிய... மேலும் பார்க்க

சித்தார்த் 40: படத் தலைப்பு டீசர்!

நடிகர் சித்தார்த்தின் 40ஆவது படத்தின் படத் தலைப்பு டீசர் வெளியாகியுள்ளது. நடிகர் சித்தார்த் சித்தா படத்தின் வெற்றிக்குப் பின், கமல்ஹாசனுடன் இந்தியன் - 2, மிஸ் யூ என்ற படங்கள் வெளியானது. இப்படங்கள் கலவ... மேலும் பார்க்க

கால்பந்து பிரபலங்கள் மூவர் பிறந்தநாள்..! ஃபிபாவின் நாட்டு நாட்டு போஸ்டருக்கு ஜூனியர் என்டிஆர் பதில்!

பிறந்தநாள் கொண்டாடும் கால்பந்து பிரபலங்கள் மூவருக்கு ஃபிபா ஆர்ஆர்ஆர் பட பாணியில் போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதற்கு ஜூனியர் என்டிஆர் பதில் அளித்ததும் வைரலாகி வருகிறது. ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தின் ... மேலும் பார்க்க

ஆர்யன் கான் இயக்கும் இணையத் தொடர் பெயர்!

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் இயக்கும் இணையத் தொடரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன் கான். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் போதைப் பொருள... மேலும் பார்க்க

500 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகும் புது வசந்தம் தொடர்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் புது வசந்தம் தொடர் 500 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஷியாம் மற்றும் சோனியா சுரேஷ், வைஷ்ணவி ஆகியோர் இத்தொடரில் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.... மேலும் பார்க்க