இந்திய புத்தாக்க நிறுவனத் தலைவர்களுடன் ஓபன்ஏஐ நிறுவனம் ஆலோசனை!
எல்லைகளில் ஊடுருவல் இல்லாத நிலையை எட்ட வேண்டும்: அமித் ஷா
தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் எல்லைகளில் ஊடுருவல் இல்லாத நிலையை எட்ட வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (பிப். 5) தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பாதுகாப்பு குறித்து தில்லியில் அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கவேண்டியிருந்ததால் இக்கூட்டத்தின் இடையில் அமித் ஷா வெளியேறினார். இதனால் கூட்டம் முழுமையாக நிறைவுப் பகுதியை எட்டவில்லை.
இக்கூட்டத்தில் தொடக்கத்தில் ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் அவரின் மனைவி மற்றும் மகள் படுகாயம் அடைந்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்புகளை மதிப்பிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், எல்லைகளில் ஊடுருவல்களை முற்றிலும் தடுக்கும் வகையில், பதில் தாக்குதல் நடவடிக்கைகள், வலுவான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாததை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியுடன் இருப்பதையும் மீண்டும் கூட்டத்தில் அமித் ஷா வலியுறுத்தினார்.
தீவிரவாதத்துக்கு எதிரான நமது போராட்டம் பூஜ்ஜிய ஊடுருவல் நிலையை எட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிக்க | இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!