எதிரணியின் முதுகுத்தண்டை உடைத்தை கோலி..! பாகிஸ்தானுடனான போட்டியை நினைவூகூர்ந்த ப...
அமெரிக்க ராணுவ விமானம் தரையிறங்க அமிர்தசரஸ் தேர்வு செய்யப்பட்டது ஏன்?
சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களுடன் அமெரிக்க ராணுவ விமானம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இன்று பகல் 2 மணிக்கு தரையிறங்கியது. ஆனால், தலைநகர் புது தில்லியில் இந்த விமானம் தரையிறங்காமல் அமிர்தசரஸ் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்று ஆம் ஆத்மி தலைவர் ஆமன் அரோரா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த விமானத்தில் இருக்கும்போது, ஏன் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், விமானம் தரையிறங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் கேட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை, மத்திய அரசு எப்போதும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் நடத்தி வருகிறது. மேலும், அமெரிக்க ராணுவ விமானத்தை தலைநகர் தில்லியில் தரையிறக்கியிருக்கலாம். ஆனால், அதனை விடுத்து அமிர்தசரஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பது எண்ணற்றக் கேள்விகளை எழுப்புகிறது என்று கூறியிருக்கிறார்.
இதுபோல, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், இந்த விமானம் பஞ்சாபில் தரையிறக்கப்பட்டதால், பஞ்சாப் மக்களே அதிகம் அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியிருப்பது போன்ற தோற்றத்தை மத்திய அரசு ஏற்படுத்த முயல்வாதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த விமானம் தலைநகர் தில்லியில் தரையிறக்கப்பட்டால், மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே அமிர்தசரஸ் தேர்வு செய்யப்பட்டதா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.