இந்திய புத்தாக்க நிறுவனத் தலைவர்களுடன் ஓபன்ஏஐ நிறுவனம் ஆலோசனை!
ஓடிடியில் கேம் சேஞ்சர்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம்.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பிப். 7-ல் வெளியாகிறது.
வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன் இணைந்து நடித்த மெட்ராஸ்காரன் திரைப்படம் பிப். 7 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மலையாள மொழிப்படமான ஓஷானா திரைப்படம் சிம்பிளி செளவுத் ஓடிடியில் பிப். 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க: சித்தார்த் 40: படத் தலைப்பு டீசர்!
இதைத் தவிர்த்து, கடந்த வாரம் வெளியான எமக்குத் தொழில் ரொமான்ஸ் படம் டெண்ட்கொட்டா ஓடிடியிலும் பயாஸ்கோப் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியிலும் பார்க்கலாம்.
டோவினோ தாமஸ், திரிஷா நடிப்பில் வெளியான மலையாள மொழிப்படமான ஐடென்டிட்டி திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா - 2 திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.