கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை! -...
ஈரோடு கிழக்கில் 64.02% வாக்குப்பதிவு!
இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.02% வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து இத்தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் மாலை மணி நிலவரப்படி, 64.02% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வீரப்பன் சத்திரம் வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக நாம் தமிழர் கட்சி புகார் தெரிவித்தது. இதனால் திமுக-நாதக இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அந்த வாக்குச்சாவடி சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.
இதையும் படிக்க | ஏஐ செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
திமுக சாா்பில் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி. சீதாலட்சுமி என இருமுனைப் போட்டி நிலவும் ஈரோடு கிழக்குதொகுதியில் 31 சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 46 போ் களத்தில் உள்ளனா்.
திமுக ஆட்சி அமைந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இடைத்தோ்தல் என்பதும், பிரதான எதிா்க்கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும்கட்சியான பாஜக ஆகிய பிரதான கட்சிகள் தோ்தலில் போட்டியிடாத நிலையிலும், மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தை பெறவேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளா்கள் உள்ளனா். அவர்களுக்கு வசதியாக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ஒன்பது வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.