இந்திய புத்தாக்க நிறுவனத் தலைவர்களுடன் ஓபன்ஏஐ நிறுவனம் ஆலோசனை!
சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாடுவாரா? ரோஹித் சர்மா பதில்!
சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாடுவாரா என்பது குறித்து ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. 15 பேர் கொண்ட இந்த அணியை கேப்டன் ரோஹித் சர்மா வழிநடத்துகிறார். துணை கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை. தசைப் பிடிப்பால் அவதிப்பட்டு வரும் பும்ரா, முழு உடல்தகுதி பெறுவதற்கான சிகிச்சையில் உள்ளார்.
பிப்.19 ஆம் தேதி முதல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.
ஸ்கேன் முடிவுகளுக்காக காத்திருப்பு
இங்கிலாந்துடன் முதல் ஒருநாள் போட்டி நாளை (பிப்.6) தொடங்குகிறது. இந்த நிலையில் ரோஹித் சர்மா செய்தியாளர் சந்திப்பில் பும்ரா குறித்து பேசியதாவது:
சில ஸ்கேன் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். அதை வைத்துதான் இங்கிலாந்து உடனான 3ஆவது போட்டியில் பும்ரா விளையாடுவாரா என்பது தெரியும் என்றார்.
கடைசி நேரத்தில் இங்கிலாந்து தொடரில் விளையாட வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்போது பும்ரா பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் மருத்துவம் பார்த்து வருகிறார்.
பிஜிடி தொடரில் கடைசி போட்டியில் பும்ரா பந்துவீசி இருந்தால் இந்தியா வெற்றி பெற வாய்ப்பிருந்ததும் குறிப்பிடத்தக்கது.