இந்திய புத்தாக்க நிறுவனத் தலைவர்களுடன் ஓபன்ஏஐ நிறுவனம் ஆலோசனை!
திருப்பதி உண்டியல் காணிக்கை: தொடர்ந்து 35-ஆவது மாதமாக ரூ.100 கோடியைக் கடந்தது!
திருப்பதி: திருமலை வெங்கடாசலபதி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை தொகையாக கடந்த டிசம்பர் வரையிலான 34 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ரூ. 100 கோடிக்கும் மேல் வருவாய் பெறப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாத உண்டியல் காணிக்கையாக ரூ. 106.17 கோடி பெறப்பட்டுள்ளது.
இதன்மூலம், கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் முதல் கடந்த ஜனவரி வரை, தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் ரூ. 100 கோடிக்கும் மேல் உண்டியல் காணிக்கை மூலம் கோயில் நிர்வாகத்துக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் திருமலை கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை தந்துள்ள பக்தர்களின் எண்ணிக்கை 20.05 லட்சமாகக் குறைந்துள்ள போதிலும், உண்டியல் காணிக்கை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, கடந்த ஆண்டில் மட்டும் 2.55 கோடி பக்தர்கள் திருமலைக்கு வருகை தந்துள்ளனர்.