சாத்தூர்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணம் அறி...
கால்பந்து பிரபலங்கள் மூவர் பிறந்தநாள்..! ஃபிபாவின் நாட்டு நாட்டு போஸ்டருக்கு ஜூனியர் என்டிஆர் பதில்!
பிறந்தநாள் கொண்டாடும் கால்பந்து பிரபலங்கள் மூவருக்கு ஃபிபா ஆர்ஆர்ஆர் பட பாணியில் போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதற்கு ஜூனியர் என்டிஆர் பதில் அளித்ததும் வைரலாகி வருகிறது.
ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் ஜூனியர் என்டிஆர் உலகம் முழுவதும் புகழ்பெற்றார்.
ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலை மையமாக வைத்து இன்று பிறந்தநாள் கொண்டாடும் 3 கால்பந்து பிரபலங்களான நெய்மர், டெவெஸ், ரொனால்டோவின் முதல் ஆங்கில எழுத்துகளை இணைத்து என்டிஆர் என ஆர்ஆர்ஆர் பட பாணியில் போஸ்டர் வெளியிட்டுள்ளது.
இந்தப் போஸ்டர் இன்ஸ்டாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது.
40 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து உலகில் தலைசிறந்த ஒருவராக அறியப்படுகிறார். நவீனகால கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவராக சாதனை படைத்துள்ளார்.
33 வயதாகும் பிரேசிலைச் சேர்ந்த மற்றுமொரு தலைசிறந்த வீரர் நெய்மர் கால்பந்து உலகின் முடிசூடா இளவரசன் என ரசிகர்களால் செல்லமால அழைக்கப்படுகிறார்.
முன்னாள் கால்பந்து வீரரும் ஆர்ஜென்டீனாவின் மேலாளருமான 41 வயதாகும் கார்லோஸ் ஆல்பர்டோ டெவெஸ் பிறந்தநாளும் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பதிவுக்கு ஜூனியர் என்டிஆர், “ஹா ஹா ஹா... பிறந்தநாள் வாழ்த்துகள் நெய்மர்... டெவெஸ்... ரொனால்டோ...” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கமெண்ட்டுக்கு சுமார் 40 ஆயிரம் லைக்குகள் கிடைத்துள்ளது.
கடைசியாக ஜூனியர் என்டிஆர் தேவரா -1 படத்தில் நடித்திருந்தார். சுமார் 300 கோடொயை வசூலித்த இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் உடன் முதல்முறையாக வார் 2 என்றப் படத்தின் மூலமாக அறிமுகமாகவிருக்கிறார். ஆக.14ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.