நீ நான் காதல் தொடரிலிருந்து விலகிய பிரபலம்!
நீ நான் காதல் தொடரில் இருந்து நடிகை தனுஷிக் விலகியுள்ளார்.
ஸ்டார் மா தொலைக்காட்சியின் பிரபல தொடரான 'நுவ்வு நேனு பிரேமா' என்ற தொடரின் மறு உருவாக்கமாக 'நீ நான் காதல்' தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2013 நவ 13 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் இத்தொடரின் பிரதான பாத்திரத்தில் பிரேம் ஜேக்கப், வர்ஷினி சுரேஷ், சங்கரேஷ் குமார், நவீன் முரளிதரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு 350 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில், அஞ்சலி பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை தனுஷிக் இத்தொடரில் இருந்து விலகுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட விடியோவில், "தவிர்க்க முடியாத சில காரணங்களால் நீ நான் காதல் தொடரில் அஞ்சலி பாத்திரத்தில் என்னால் தொடர முடியாது.
வாய்ப்பு அளித்த விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி, தொடர் குழுவுக்கு நன்றி. இனி அஞ்சலியாக நடிக்கவுள்ள ஸ்வேதாவுக்கும் நீங்கள் ஆதரவு தர வேண்டும். கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன்” என்று பேசியுள்ளார்.
முன்னதாக இத்தொடரில் இருந்து நடிகை சாய் காயத்ரி விலகிய நிலையில், தற்போது தனுஷிக் விலகியுள்ளார்.