500 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகும் புது வசந்தம் தொடர்!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் புது வசந்தம் தொடர் 500 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
ஷியாம் மற்றும் சோனியா சுரேஷ், வைஷ்ணவி ஆகியோர் இத்தொடரில் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். புது வசந்தம் குழுவினருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1.30 மணிக்கு புதுவசந்தம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் ஜூலை 2023 முதல் ஒளிபரப்பாகிறது.
இத்தொடரில் ஷியாம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக சோனியா சுரேஷும் நடிக்கின்றனர். முக்கிய பாத்திரத்தில் வைஷ்ணவி நடிக்கிறார்.
சின்னதிரைகளில் துணை பாத்திரத்தில் தனது பயணத்தை தொடங்கிய ஷியாம், இத்தொடரின் மூலம் நாயகனாக நடித்து வருகிறார். பிற்பகலில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த தொடராக புது வசந்தம் உள்ளது.
இதையும் படிக்க | மெளனம் பேசியதே தொடரில் ஜோவிதாவுக்கு பதிலாக புதிய நடிகை!