கால்பந்து பிரபலங்கள் மூவர் பிறந்தநாள்..! ஃபிபாவின் நாட்டு நாட்டு போஸ்டருக்கு ஜூன...
தெலுங்கில் தோல்வியடைந்த மத கஜ ராஜா!
நடிகர் விஷால் நடித்த மத கஜ ராஜா திரைப்படம் தெலுங்கில் கவனம் பெறவில்லை.
இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் 12 ஆண்டுகள் கழித்து பொங்கல் வெளியீடாக ஜன.12-ல் வெளியானது.
இதையும் படிக்க: விடாமுயற்சி சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!
நடிகர்கள் விஷால், சந்தானம், மனோபாலா ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாகக் கவனம் பெற்றதால் படம் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.
ஆச்சரியமாக ரூ. 50 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர். சி - விஷால் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது.
ஆனால், மத கஜ ராஜா திரைப்படத்தின் தெலுங்கு வடிவம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறாததால் தெலங்கானா மற்றும் ஆந்திரத்தில் ரூ. 2 கோடி வரை மட்டுமே வசூலித்திருக்கிறதாம். இதனால், மத கஜ ராஜா தெலுங்கில் வணிகத் தோல்வியைச் சந்தித்துள்ளது.