செய்திகள் :

கவினின் மாஸ்க் வெளியீடு எப்போது?

post image

நடிகர் கவின் நடித்த மாஸ்க் திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கவின் ஸ்டார் படத்திற்குப் பின் பிளடி பெக்கர் படத்தில் நடித்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிதாக வணிக தோல்வியைப் படம் சந்திக்கவில்லை.

தொடர்ந்து, வெற்றி மாறன் தயாரிப்பில் மாஸ்க் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். அறிமுக இயக்குநர் விக்ரனன் அசோக் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் கதாநாயகியாக ருஹானி ஷர்மாவும் முக்கிய கதாபாத்திரங்களில் ஆண்ட்ரியா, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதையும் படிக்க: 10 ஆண்டுகளை நிறைவு செய்த என்னை அறிந்தால்!

இந்த நிலையில், இப்படம் ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் அப்டேட்கள் இனி ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கும் படமென்பதால் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் மீதான ஆவலும் எழுந்துள்ளது.

ஆர்யன் கான் இயக்கும் இணையத் தொடர் பெயர்!

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் இயக்கும் இணையத் தொடரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன் கான். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் போதைப் பொருள... மேலும் பார்க்க

500 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகும் புது வசந்தம் தொடர்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் புது வசந்தம் தொடர் 500 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஷியாம் மற்றும் சோனியா சுரேஷ், வைஷ்ணவி ஆகியோர் இத்தொடரில் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.... மேலும் பார்க்க

தெலுங்கில் தோல்வியடைந்த மத கஜ ராஜா!

நடிகர் விஷால் நடித்த மத கஜ ராஜா திரைப்படம் தெலுங்கில் கவனம் பெறவில்லை.இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் 12 ஆண்ட... மேலும் பார்க்க

ஸ்குவிட் கேம் - 3 வெளியீட்டுத் தேதி!

பிரபல கொரியன் இணையத் தொடரான ஸ்குவிட் கேம் மூன்றாவது சீசன் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல கொரியன் இயக்குநர் கவாங் டோங்யுக் இயக்கத்தில் லீ ஜங் ஜே, பார்க் கே சூ, வி கா ஜோன் ஆகியோர் நடித்து... மேலும் பார்க்க

10 ஆண்டுகளை நிறைவு செய்த என்னை அறிந்தால்!

நடிகர் அஜித் குமாரின் என்னை அறிந்தால் திரைப்படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.நடிகர் அஜித், அருண் விஜய், த்ரிஷா, அனுஷ்கா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிய படம் - என்னை அறிந்தால். 2015-ல் வெளியானது. அஜி... மேலும் பார்க்க

விடாமுயற்சி சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

விடாமுயற்சி திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ படமானது உலகம் முழுவதும்... மேலும் பார்க்க