செய்திகள் :

விமான நிலையக் காவல் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை!

post image

மேற்கு வங்கத்தில் விமான நிலையத்தில் பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) கான்ஸ்டபிள், சர்வதேச சரக்குப் பிரிவில் உள்ள கட்டடத்தில் காலை 10.40 மணியளவில் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். இதனைக் கண்ட பிற அதிகாரிகள், அவரின் உடலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இருப்பினும், அவர் முன்னரே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த கான்ஸ்டபிள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனிடையே, அவரின் உடலை உடற்கூறாய்வுக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:இந்தியர்களுக்கு அநீதி இழைக்கும் அமெரிக்கா; பிரதமர் மோடி மௌனம்! காங்கிரஸ் குற்றச்சாடு

தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த கான்ஸ்டபிளின் தனிப்பட்ட வாழ்க்கையில் அல்லது தொழிலில் மன அழுத்தம் இருந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகை ரூ.17 லட்சம் கையாடல்: பெண் காவலர் பணி இடைநீக்கம்

பனாஜி : கோவா காவல் துறையில் தலைமைக் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவர், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டோரிடருந்து வசூலிக்கப்பட்ட ரூ.17 லட்சம் பணத்தை கையாடல் செய்த குற்றத்துக்காக பணியிலி... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சி மாறுகிறதா? கருத்துக் கணிப்பு முடிவுகள்!

தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. மேலும் பார்க்க

இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!

இந்து சமய நடைமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நீக்கியுள்ளது. நீக்கப்பட்டவர்களுக்கு விருப்ப ஓய்வு அல்லது அவர்கள் விரும்பினால் அரசின் பிற துறைகளில் பணி புரிய தேவஸ்தானம் தனத... மேலும் பார்க்க

அமெரிக்க ராணுவ விமானம் தரையிறங்க அமிர்தசரஸ் தேர்வு செய்யப்பட்டது ஏன்?

சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களுடன் அமெரிக்க ராணுவ விமானம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இன்று பகல் 2 மணிக்கு தரையிறங்கியது. ஆனால், தலைநகர் புது தில்லியில் இந்த விமானம் தரையிறங்காமல் அமிர்தசரஸ் தே... மேலும் பார்க்க

தில்லியில் வாக்குப்பதிவு நிறைவு!

தலைநகர் தில்லியில் மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.காலை மந்தமாக நடைபெற்றுவந்த வாக்குப் பதிவு, பிற்பகலில் அதிகரிக்கத் தொடங்கியதால், வாக்கு வி... மேலும் பார்க்க

பயனாளிகளின் உண்மைத் தன்மை: எண்ணெய் நிறுவனங்களுக்கு காலக்கெடு

எண்ணெய் நிறுவனங்கள், எரிவாயு உருளை பெறும் பயனாளிகளின் உண்மைத் தன்மையை பயோ-மெட்ரிக் முறையில் உறுதி செய்வதற்கான பணியை மார்ச் மாதத்துக்குள் முடிக்க மத்திய அரசு கெடு விதித்துள்ளது.எண்ணெய் நிறுவனங்கள், எரி... மேலும் பார்க்க