விடாமுயற்சி சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!
விடாமுயற்சி திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ படமானது உலகம் முழுவதும் திரையரங்குகளில் நாளை (பிப். 6) வெளியாகவுள்ளது.
ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படம், உலகம் முழுவதும் 800 திரைகளுக்கு மேல் திரையிடப்படவுள்ளது.
இதையும் படிக்க : விடாமுயற்சி பட்ஜெட் இவ்வளவா?
இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் பிப். 6 ஆம் தேதி ஒருநாள் மட்டும் 5 காட்சிகள் திரையிட்டுக் கொள்ள திரையரங்குகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
முதல் காட்சியை காலை 9 மணிக்கு தொடங்கி கடைசி காட்சியை நள்ளிரவு 2 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு காட்சி அதிகரிக்கப்படுவதால் சுகாதாரக் குறைபாடு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.