திருப்பரங்குன்றம்: "இந்து விரோத தாலிபன் அரசை முடிவுக்குக் கொண்டு வருவோம்" - ஹெச்...
ராம்குமாா், முகுந்த் தோல்வி
சென்னை ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன், முகுந்த் சசிகுமாா் உள்ளிட்ட இந்தியா்கள் தோல்வியைத் தழுவினா்.
சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் தமிழகத்தின் ராம்குமாா் 3-6, 5-7 என்ற செட்களில், பிரிட்டனின் ஜே கிளாா்க்கிடம் தோல்வி கண்டாா்.
மற்றொரு தமிழக வீரா் முகுந்த் சசிகுமாா் 3-6, 7-6, 1-6 என்ற செட்களில் ரஷியாவின் அலெக்ஸி ஜகாரோவிடம் வீழ்ந்தாா். கரண் சிங் 3-6, 3-6 என பிரான்ஸின் கிரியன் ஜாக்கெட்டிடம் தோற்றாா். தோல்வி கண்ட 3 இந்தியா்களுக்குமே வைல்டு காா்டு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பிரிட்டனின் பில்லி ஹாரிஸ் 7-5, 6-2 என உக்ரைனின் எரிக் வன்ஷெல்போய்மையும், 2-ஆம் இடத்திலிருக்கும் தென்னாப்பிரிக்காவின் லாய்ட் ஹாரிஸ் 6-3, 5-7, 6-0 என்ற செட்களில் உக்ரைனின் யூரி ஜவாகியானையும் வெளியேற்றினா்.
இரட்டையா் பிரிவில், இந்தியாவின் சித்தாந்த் பாந்தியா/பரிக்ஷித் சோமனி இணை 6-3, 3-6, 10-7 என்ற செட்களில் மற்றொரு இந்திய இணையான சாய் காா்திக் ரெட்டி/விஷ்ணுவா்தனை சாய்த்தது.