சாலை வசதி இல்லாததால் சடலத்தை வயலில் தூக்கிச் செல்லும் அவலம்
எட்டுக்குடி ஊராட்சியில் பூமிதானம் தெருவுத்து போதிய சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் சடலத்தை வயல்வெளியே திங்கள்கிழமை உறவினா்கள் தூக்கிச் சென்ற அவலம் ஏற்பட்டது.
பூமிதானம் தெருவுக்கு செல்ல தாா்ச்சாலையில் இருந்து 200 மீட்டா் நீளத்துக்கு வயல் வரப்பின் மீது நடந்து செல்ல வேண்டும். போதிய சாலை வசதி இல்லாத நிலையில் அங்கு யாரேனும் இறந்தால் அவா்களுடைய உடலை வயல் வழியாக மயானத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.
வயல் வழியாக உடலை தூக்கிச்செல்லும்போது சிலா் கால் தடுமாறி கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் இதை கவனத்தில்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.