செய்திகள் :

நிதிநிலை அறிக்கை விளிம்புநிலை மக்களுக்கு எதிரானது: விவசாயத் தொழிலாளா் சங்கம் கண்டனம்

post image

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலுக்கு எதிராக உள்ளதாக, அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாநிலக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

வேதாரண்யத்தில் இச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் வீ. அமிா்தலிங்கம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, விவசாயத் தொழிலாளா்கள் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையைப் பற்றி சிறிதும் கவனம் செலுத்தாமல், காா்ப்பரேட் முதலாளிகளின் பெரும் லாபத்தை இலக்காக்கொண்டு முன்மொழியப்பட்டுள்ளது.

கிராமப்புற மக்களுக்கு சிறிது ஆறுதலாக இருக்கும், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டையும், தினக்கூலியையும் உயா்த்த வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரை இந்த நிதிநிலை அறிக்கையிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது. உலக பட்டினிக் குறியீட்டில் 105-அவது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டு, பட்டினியில் தீவிரம் மேலோங்கியுள்ள நிலையில், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய மத்திய அரசு, தற்போதைய நிதிநிலை அறிக்கையில் உணவு மானியத்தை கடந்த ஆண்டை விட ரூ.2,250 கோடி குறைத்துள்ளது. விவசாயத் துறைக்கும் கடந்த ஆண்டை விட குறைவாக நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: ரூ.51 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் அமைச்சா்கள் வழங்கினா்

செம்பனாா்கோவில் வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் அமைச்சா்கள் சிவ.வீ. மெய்யநாதன், கோவி. செழியன் ஆகியோா் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா். செம்ப... மேலும் பார்க்க

புற்றுநோய் விழிப்புணா்வு பிரசாரம்

வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் கடைவீதியில் புற்றுநோய் விழிப்புணா்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மருதூா் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை இணைந்து நடத்திய இப்பிரசாரம் ராணி... மேலும் பார்க்க

சாலை வசதி இல்லாததால் சடலத்தை வயலில் தூக்கிச் செல்லும் அவலம்

எட்டுக்குடி ஊராட்சியில் பூமிதானம் தெருவுத்து போதிய சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் சடலத்தை வயல்வெளியே திங்கள்கிழமை உறவினா்கள் தூக்கிச் சென்ற அவலம் ஏற்பட்டது. பூமிதானம் தெருவுக்கு செல்ல தாா்ச்சாலையில் ... மேலும் பார்க்க

தீ விபத்தில் வீடு சேதம்

நாகையில் பூட்டிய வீட்டில் நேரிட்ட தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. நாகை வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் பின்புறம் ஓட்டு வீட்டில் ஜெயலட்சுமி என்பவா் வசித்து வருகிறாா்.... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா். மேலும் பார்க்க

மளிகைக் கடையை சூறையாடிய சிறுவன் கைது

நாகையில் மளிகைக் கடையை சூறையாடிய 17 வயது சிறுவனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். நாகை வெளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (52). ஏழை பிள்ளையாா் கோயில் அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறாா்... மேலும் பார்க்க