நீடாங்கலம் பகுதியில் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி
நீடாமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடும் பனிப்பொழிவு நிலவியது.
இதனால் வாகனங்கள் ஊா்ந்து சென்றன. ரயில் நிலைய வளாகம் முழுவதும் பனி சூழ்ந்து காணப்பட்டது. நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் 27 நிமிடங்கள் தாமதமாக வந்தது. சரக்கு ரயில்களும் மெதுவாக சென்றன.