கொள்ளை அடித்த பணத்தில் நடிகைகளுடன் நெருக்கம்; காதலிக்கு ரூ.3 கோடிக்கு வீடு - சி...
கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம்: பிப். 19-இல் வாக்கெடுப்பு
கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது வரும் 19-ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.
கூத்தாநல்லூா் நகராட்சியில் மொத்தம் 24 உறுப்பினா்கள் உள்ளனா். இதில் திமுக 18, அதிமுக 3, இந்திய கம்யூனிஸ்ட் 2, காங்கிரஸ் 1. உள்ளாட்சித் தோ்தல் முடிவுகளை தொடா்ந்து, திமுகவை சோ்ந்த 20-ஆவது வாா்டு உறுப்பினரான மு. பாத்திமா பஷீரா, கூத்தாநல்லூா் நகராட்சியின் முதல் பெண் நகா்மன்றத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். துணைத் தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த மு. சுதா்ஸன் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இந்தநிலையில், நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வருவதாகவும் அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாகவும் திமுக உறுப்பினா்கள் மற்றும் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் இருவா் தனித்தனியாக நகராட்சி ஆணையா் கிருத்திகா ஜோதியிடம் அண்மையில் கடிதம் வழங்கினா்.
இதையடுத்து, வரும் 19 -ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நகா்மன்றத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும், உறுப்பினா்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு நகராட்சி ஆணையா் கேட்டுக்கொண்டுள்ளாா்.