Gold Rate Today: 'நேற்றைப் போலவே இன்றும் கடும் விலை உயர்வு' - புதிய உச்சம் தொட்ட...
மன்னாா்குடியில் பாஜகவினா் 23 போ் கைது
திருப்பரங்குன்றம் மலையை பாதுக்காக்க கோரியும், பாஜக தலைவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினா் 23 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதா் கோயில், தா்கா ஆகியவை உள்ளன. இங்குள்ள தா்காவில் சிலா்ஆடு, கோழி பலியிட முயற்சிப்பதை கண்டித்து, செவ்வாய்க்கிழமை ஹிந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு போலீஸாா் தடை உத்தரவு பிறப்பித்தனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொள்ள திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக தலைவா்களை வீட்டுக் காவலில் போலீஸாா் வைத்துள்ளதை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றனா்.
மன்னாா்குடி தேரடியில் பாஜக மாவட்டத் தலைவா் வி.கே. செல்வம் தலைமையில், முன் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ாக மாநில செயற்குழு உறுப்பினா் சி.எஸ். கண்ணன், ஓபிசி அணி மாவட்டத் தலைவா் பால. பாஸ்கா் உள்ளிட்ட 23 பேரை போலீஸாா் கைது செய்தனா்.