சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் மாபெரும் போராட்டம்: அன்புமணி
Erode & Delhi Election live: ஈரோட்டில் இருமுனை... டெல்லியில் மும்முனை; தொடங்கியது வாக்குப் பதிவு!
திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் செய்தியாளர் சந்திப்பு!
தொடங்கியது ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் த்தேர்தல் வாக்குப்பதிவு!
ஈரோடு இடைத்தேர்தல்:
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு 2023-ல் நடைபெற்ற இடைத்தேர்தல் மூலம் மீண்டும் எம்.எல்.ஏ-வான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு இறுதியில் உயிரிழந்ததைத்தொடர்ந்து, பிப்ரவரி 5-ம் தேதி (இன்று) டெல்லி சட்டமன்றத் தேர்தலோடு இங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க, த.வெ.க ஆகிய கட்சிகள் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துவிட்டதால் தி.மு.க-வும், நா.த.க-வும் நேரடியாக தேர்தல் களத்தில் மோதும் சூழல் உருவானது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-31/gccdf3hy/679d10410903f.jpg)
தி.மு.க, கடந்த 2011-ல் தேமுதிக சார்பில் இதே தோகுடியில் போட்டியிட்டு வென்ற வி.சி.சந்திரகுமாரை களமிறக்கியிருக்கிறது. நாதக எம்.கே.சீதாலட்சுமி என்பவரை வேட்பாளராகக் களமிறக்கியிருக்கிறது. இந்த நிலையில், இன்று காலையில் ஈரோட்டில் வாக்குப் பதிவு தொடங்கியது.
டெல்லி சட்டமன்றத் தேர்தல்:
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-31/uomwg0bg/vs_71.png)
டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலையில் தொடங்கியிருக்கிறது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் தனித்து களமிறங்குகின்றன. ஆம் ஆத்மியின் வருகைக்குப் பின்னர் ஆட்சியைப் பிடிக்கப் போராடிக்கொண்டிருக்கும் காங்கிரஸும், பா.ஜ.க-வும் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. இதனால், ஆம் ஆத்மி vs காங்கிரஸ் vs பா.ஜ.க என்ற மும்முனைப் போட்டி உருவாகியிருக்கிறது.