கவினின் புதிய பட அறிவிப்பு!
நடிகர் கவின் படத்தின் போஸ்டர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் கவின் ஸ்டார் படத்திற்குப் பின் பிளடி பெக்கர் படத்தில் நடித்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிதாக வணிக தோல்வியை படம் சந்திக்கவில்லை.
தொடர்ந்து, வெற்றி மாறன் தயாரிப்பில் மாஸ்க் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
இதையும் படிக்க: கூலி படப்பிடிப்பு அப்டேட்!
இந்த நிலையில், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடித்துவந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
காதல் கதையாக உருவான இதில் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாக நடித்துள்ளார். இப்படமும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-10/xjj2dkn2/GjWKquqWcAASs8X.jpg)
இந்த நிலையில், இப்படத்தின் பெயர் போஸ்டர் நாளை (பிப்.11) மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.