காதலரை மணந்தார் பார்வதி நாயர்!
நடிகை பார்வதி நாயர் தன் காதலரை இன்று திருமணம் செய்துகொண்டார்.
தமிழில் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, உத்தம வில்லன், நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர், விஜய்யின் கோட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அண்மையில், பார்வதி நாயர் தன் காதலரும் தொழிலதிபருமான சென்னையைச் சேர்ந்த ஆஷ்ரித் அசோக் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.
இதையும் படிக்க: ரூ. 100 கோடி வசூலித்த விடாமுயற்சி!
இந்த நிலையில், இன்று சென்னை திருவான்மியூரில் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இந்த இணைக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.