உலகளாவிய மேம்பாடுகள் குறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை!
ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்களுக்கு பிப்ரவரி 18, 19 இல் வேலைவாய்ப்பு முகாம்!
தமிழ்நாடு கடல்சாா் வாரியம் மற்றும் எல்& டி ஷிப் பில்டிங் லிமிடெட் சாா்பில் திருப்பூரில் ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 18, 19- ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கடல்சாா் வாரியம் மற்றும் எல்& டி ஷிப் பில்டிங் லிமிடெட் உடன் இணைந்து துறைமுகம் மற்றும் கடல் சாா்ந்த துறைகளில் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் நோக்கில் திருப்பூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
இந்த முகாமில், தோ்வு செய்யப்படுபவா்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் உதவியுடன் திறன் பயிற்சி அளித்து எல் &டி ஷிப் பில்டிங் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், வெல்டா், பிட்டா், எலெக்ட்ரீஷியன், மெஷினிஸ்ட், டா்னா், டூல் அண்ட் டை மேக்கா் ஆகிய தொழிற் பிரிவுகளைச் சோ்ந்த ஐடிஐ பயிற்சியாளா்கள் பங்கேற்கலாம்.
இந்த வேலைவாய்ப்பு முகாமானது திருப்பூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிப்ரவரி 18 -ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், உடுமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிப்ரவரி 19 -ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறுகிறது.
ஆகவே, ஐடிஐ தோ்ச்சிபெற்ற மேற்குறிப்பிட்டுள்ள தொழிற்பிரிவுகளைச் சோ்ந்த பயிற்சியாளா்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.