NEEK: ``எதை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்தீங்கன்னு தெரியல, ஆனா...' - மாமா தனுஷ் குற...
`சீமான் நல்ல என்டர்டெய்னர்; நானும் அவரை ரசிக்கிறேன்'- பாஜக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன்
தமிழக பாஜக-வில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று தேனியில் மாவட்டத் தலைவர் ராஜபாண்டி பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், ``திமுக-வுக்கு எதிராக அவர்களை அகற்ற வேண்டிய கட்சியுடன் கூட்டணியை அமைப்போம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/dma38g3y/2025-02-10-at-21.04.04ca762c28.jpg)
ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் என டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சிக்கு வந்தார். அவரை மக்கள் நம்பினார்கள். ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்று மீண்டும் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பளித்தார்கள். ஆனால் அவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகள் அனைத்திலும் ஊழல் செய்தார்கள். இதனால் இம்முறை அவர்கள் டெல்லியில் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி வாக்கு சதவீதம் குறையும்.
பிரசாந்த் கிஷோர் ஒரு கமர்சியல் ஏஜென்சி தான். ஒரு காலத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக என அனைவருக்கும் ஆலோசகராக இருந்தார். பணம் அதிகம் கொடுக்கக்கூடிய இடத்தில் அவர் ஆலோசனை கொடுக்கிறார். இவர்களது சந்திப்பு எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரியவில்லை. இது ஒரு வணிக ரீதியான ஒப்பந்தம் தான்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-26/wbosd64s/seeman.jpg)
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் தமிழகத்தில் எம்ஜிஆரும், ஆந்திராவில் என்.டி.ராமாராவும் வெற்றி பெற்றார். தமிழகத்தில் எம்ஜிஆர் வெற்றிக்கு அடுத்தபடியாக யாரும் வெற்றி பெற வரவில்லை. விஜயகாந்த், கமலஹாசன், சிவாஜி , கருணாஸ், கார்த்தி போன்றோருக்கு அரசியலில் என்ன நிலைமை ஏற்பட்டதோ அதுதான் தவெக தலைவர் விஜய்க்கும் ஏற்படும். சீமான் ஒருநாள், கவிஞர் போன்று உச்சத்தில் இருந்து பேசுவார். மறுநாள் வேறு ஒன்றை உச்சத்தில் பேசுவார். நாம் தமிழர் கட்சிக்கு எதிர்காலம் கிடையாது. அவர் ஒரு என்டர்டெயினர் சீமானை மக்கள் ரசிக்கின்றனர்... நம்பவில்லை. நானும் சீமானை ரசிக்கிறேன்" என்றார்.