L.I.C: ஒன்பது மாத கால செயல்பாட்டு சிறப்பம்சங்களை வெளியிட்ட எல்.ஐ.சி நிறுவனம்
5 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கும் மருத்துவர் - சுகாதாரம் குறித்து என்ன சொல்கிறார் தெரியுமா?
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக குளிக்காமல் இருப்பதாக கூறியிருக்கிறார். ஐந்து வருடங்களாக குளிக்காமல் இருக்கும்போதும் கூட தன்மீது எந்தவிதமான துர்நாற்றமும் வீசவில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார். எதற்காக இவ்வாறு குளிக்காமல் இருக்கிறார் என்பதற்கும் சில காரணங்கள் கூறுகிறார். அது என்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குளித்தல், பல் துலக்குதல், துணிகளை துவைத்து அணிதல், நகம் வெட்டுதல் போன்ற சுகாதார பழக்க வழக்கங்கள் நம் அன்றாட வாழ்வில் இருப்பது அவசியம் என்று சிறுவயதிலிருந்தே நமக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்கின்றனர். ஒரு நாளைக்கு குளிக்கவில்லை என்றால் அவ்வளவு சோம்பேறியாகவும் அழுக்காகவும் உணருவோம்.
தினமும் குளிப்பது ஆரோக்கியத்திற்கு அவசியம் என்று நாம் அதனை அன்றாடம் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கு அமெரிக்காவை சேர்ந்த ஒரு மருத்துவர் ஐந்து ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கிறார் இதற்கு அவர் கூறும் காரணம் மேலும் ஆச்சர்யப்பட வைக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/dj8cuo3x/hero-image-9.jpg)
இதுகுறித்து அந்த மருத்துவர் கூறுகையில், ``நாம் எந்த ஒரு மெடிக்கல் ஷாப்பிற்கு சென்றாலும் சளி காய்ச்சல் மருந்துகளுக்கு அடுத்ததாக சோப்புகளும் ஷாம்புகளும் தான் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் என்னை யோசிக்க வைத்தது, இதெல்லாம் எதற்காக? என்று எண்ணினேன். உண்மையில் இது போன்ற பொருள்கள் நமக்கு எவ்வளவு அவசியம் என்பதை புரிந்து கொள்ள என்னை தூண்டியது" எனக் குறிப்பிட்டார்.
``சோப்புகள் சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய்களை நீக்குகிறது. குளித்த பிறகு நாம் வறட்சியாக உணர்கிறோம். உடற்பயிற்சி செய்த பிறகு வரும் வேர்வைக்கு கூட சோப்புகள் ஷாம்புகளை பயன்படுத்தாமல் வெறும் தண்ணீர் கொண்டு கழுவினால் போதும்.
குளிக்காமல் இருந்தால் உடலில் துர்நாற்றம் வீசிவிடுவோமோ என்பது என்னுடைய மிகப்பெரிய கவலை. இருப்பினும், காலப்போக்கில் நம் உடல் குளிக்காமல் இருப்பதற்கு ஏற்றவாறு மாறிவிடும்" என்கிறார் அவர்.
ஷாம்புக்கள், சோப்புகள் போன்ற சுகாதாரப் பொருட்கள் உடலில் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளை மேற்கோள் காட்டி, இது போன்ற பொருட்கள் தேவையற்றவை மற்றும் பயனற்றவை என்றும் இவர் கூறுகிறார்.
தான் மக்களை முற்றிலும் குளிப்பதை நிறுத்த சொல்லவில்லை என்றும், அதற்கு பதிலாக சுகாதாரம் சார்ந்த பொருள்கள் குறித்து அதிக கவனத்துடன் செயல்படுங்கள் என்று தான் சொல்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அமெரிக்காவின் கிளைமேட்டிற்கு இவர் சொல்வது சரி என்றால், இந்தியா போன்ற நாடுகளின் காலநிலைக்கு இது பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.