21 சதங்கள்.. 39 அரைசதங்கள்.. 7200 ரன்கள்.. ஓய்வை அறிவித்த கேகேஆர் நட்சத்திரம்!
கலாஷேத்ரா பாலியல் புகார்: "விசாரணையை 4 வாரங்களில் தொடங்க வேண்டும்" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களில் தொடங்க வேண்டும் எனச் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலாஷேத்ரா நடனப் பள்ளியில் 1995-2001ம் ஆண்டு வரை படித்த மாணவி, பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி அந்த முன்னாள் மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-03/f218a5fc-8fba-4125-a97b-e736001cfb44/httpswww_google_comsearchq_kalakshetra_rlz_1C9BKJA_enIN1007IN1007_oq_kalashe_aqs_chrome_2_69i57j46i1.png)
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஶ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இறுதி அறிக்கையைக் கோப்புக்கு எடுத்து, நான்கு வாரங்களில் விசாரணையைத் துவங்கும்படி, சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb