செய்திகள் :

"நான் அளித்த 1 லட்ச தீர்ப்புகளும் முருகன் கூறியதுதான்..." - சர்ச்சையைக் கிளப்பிய முன்னாள் நீதிபதி

post image

காரைக்குடி நெற்குப்பை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம், தான் 28 ஆண்டுகளாக நீதித்துறையில் பணியாற்றி, ஒரு லட்சம் தீர்ப்புகளை வழங்கியுள்ளதாகவும், அதில் ஒன்று கூடத் தான் வழங்கியதல்ல எல்லாம் முருகன் வழங்கியது எனவும் பேசி இருக்கிறார். இது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம்
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம்

“28 ஆண்டுகள் நான் நீதிபதியாக இருந்திருக்கிறேன். அந்த நீதிமன்றத்தில் ஒரு லட்சம் தீர்ப்புகள் வழங்கி இருக்கிறேன். இதில் ஒரு தீர்ப்புகூட நான் சத்தியமாகக் கூறவில்லை. எல்லாம் முருகன் கூறியதுதான். சொன்ன தீர்ப்பு எல்லாம் அவர் சொன்னது. நான் சொன்னது அல்ல. சத்தியம்தான் நிற்கும் நேர்மைதான் நிற்கும்.

முருகா முருகா என்றால் முருகன் வர மாட்டார். எங்கு நேர்மை இருக்கிறதோ அங்குதான் வருவார். பக்திக்கு வயது இல்லை. எந்த வயதில் வேண்டுமானாலும் பக்தி வரும். பக்திக்குப் பலன் உண்டு. அதேபோல் தர்மத்திற்கும் பலன் உண்டு” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

RN Ravi: `யார் அறிவுரையின்படி ஆளுநர் இவ்வாறு செயல்படுகிறார்?’ - உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கு..! தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இன்றைய வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்ற நீதிப... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதான விவகாரம்: யூடியூபர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போல வீடியோ எடுத்த சம்பவத்தில் யூடியூபர் திவ்யா, அவரின் நண்பர் கார்த்திக், சித்ரா, ஆனந்த் ராமன் ஆகிய நான்கு பேர் கடந்... மேலும் பார்க்க

ஈமு கோழி மோசடி : ஏமாற்றியவருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.19 கோடி அபராதம் - கோவை நீதிமன்றம் அதிரடி

கொங்கு மண்டலத்தில் மக்களின் ஆசைகளை தூண்டு விட்டு பல்வேறு நூதன மோசடிகள் அரங்கேறின. அதில் ஈமு கோழி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். சுமார் 15 ஆண்டுகளாகியும் ஈமு கோழி மோசடி வழக்கு விசாரணை இப்போதும் ... மேலும் பார்க்க

`இந்துக்களுக்கிடையிலான திருமணம் புனிதமானது; அதை ஒரே வருடத்தில் கலைக்க முடியாது'- உயர் நீதிமன்றம்

உத்தரப்பிரதேசத்தில் திருமண விவாகரத்து வழக்கு ஒன்றில், இரண்டு இந்துக்களுக்கிடையிலான திருமணம் புனிதமானது என்றும், திருமணமான ஓர் ஆண்டுக்குள் அதைக் கலைக்க முடியாது என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் குறிப்ப... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம் இரட்டை ஆணவக் கொலை; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை; கோவை நீதிமன்றம் அதிரடி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். இரண்டாவது மகன் கனகராஜ் மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைக்கிழங்கு மார்கெட்டில் கூலி தொழிலாளியாக பணியாற்ற... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவாகரம்: `நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க முயல வேண்டாம்' - உயர் நீதிமன்றக் கிளை கருத்து

"இந்த வழக்கை பொறுத்தவரை ஏனோ தானோவென்று குற்றவாளிகளை முடிவு செய்யவில்லை, அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து, ஆவணங்கள் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே குற்றவாளிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது..." ... மேலும் பார்க்க