செய்திகள் :

மகாராஷ்டிர தேர்தல்: 5 மாதத்தில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது எப்படி? ராகுல் கேள்வி

post image

மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தலுக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடையிலான 5 மாதங்களில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.

இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட மகா விகாஸ் அகாடி கூட்டணிக் கட்சிகள் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தனர்.

இதையும் படிக்க : தமிழக பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் போட்டி!

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சிவசேனை (உத்தவ் அணி) எம்பி சஞ்சய் ரெளத் மற்றும் தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) எம்பி சுப்ரியா சுலே ஆகியோர் செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்து மகாராஷ்டிர தேர்தல் முரண்பாடுகள் குறித்து பேசினர்.

அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

”மகாராஷ்டிரத்தில் போட்டியிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி நாங்கள் அமர்ந்துள்ளோம். வாக்காளர்கள் மற்றும் வாக்குப் பட்டியல் தொடர்பாக எங்கள் குழுக்கள் ஆய்வு நடத்தியுள்ளன. பல முரண்பாடுகளை கண்டறிந்துள்ளோம்.

2019 சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில் மகாராஷ்டிரத்தில் புதிதாக 32 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், 2024 மக்களவைத் தேர்தலுக்கும் 2024 மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடைப்பட்ட 5 மாதங்களில் மட்டும் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில், புதிதாக சேர்க்கப்பட்ட 39 லட்சம் வாக்காளர்கள் யார்? இந்த எண்ணிக்கையானது ஹிமாசல் பிரதேசத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு சமம். மகாராஷ்டிரத்தில் வாக்கு செலுத்தும் வயதுடைய மொத்த மக்கள் தொகையைவிட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. திடீரென வாக்காளர்கள் உருவானது எப்படி?

எங்களுக்கு மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கான வாக்காளர் பட்டியல் தேவை, அவர்களின் பெயரும் முகவரியும் தேவை. புதிய வாக்காளர்கள் யார் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.

பல வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர், ஒரு வாக்குச்சாவடியில் இருந்து மற்றொரு வாக்குச்சாவடிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களின் தலித், பழங்குடி மற்றும் சிறுபான்மை சமூகத்தினரே அதிகம்.

தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. பதிலளிக்காததற்கு ஒரே காரணம், அவர்களின் செயலில் தவறு இருப்பதுதான். குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை. தரவுகளை தெளிவாக வழங்குகிறோம்” என்றார்.

மேற்கு வங்கம்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலி

மேற்கு வங்கத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர்.மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தின் கல்யாணியில் உள்ள பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டத... மேலும் பார்க்க

கனடாவில் காணாமல் போன 20,000 இந்திய மாணவர்கள்!

இந்தியாவிலிருந்து கனடாவுக்கு மாணவர்கள் விசாவில் சென்று, ஆனால் இதுவரை எந்த கல்லூரியிலும் சேராமல், 20000 மாணவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவலே தெரியாமல் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பார்க்க

விடுப்பு எடுப்பதில் தகராறு! சக பணியாளர்களை கத்திக்குத்திய அரசு ஊழியர்! (விடியோ)

மேற்கு வங்கத்தில் விடுப்பு தர மறுத்ததால் 4 பேரை கத்தியால் குத்திய அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.மேற்கு வங்க மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் தனது அலுவலகத்தில் விடுப்பு தர மறுத்ததால் சக ஊழியர்... மேலும் பார்க்க

வல்லுறவு குற்றவாளி ஆசாராம் பாபு படத்துடன் தில்லி மெட்ரோவில்

தில்லி மெட்ரோ ரயிலில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஆசாராம் பாபுவின் படத்துடன் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம், ஜோத்பூரில் உள்ள தன... மேலும் பார்க்க

ரெப்போ விகிதம் 0.25% குறைப்பு! சாதகமும் பாதகமும்!

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் கடன் தவணை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கைக... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இதுவரை 40 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் வெள்ளிக்கிழமை வரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்... மேலும் பார்க்க