செய்திகள் :

மேற்கு வங்கம்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலி

post image

மேற்கு வங்கத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர்.

மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தின் கல்யாணியில் உள்ள பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து இதுவரை 4 உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இருவர் பெண்கள் எனவும் மாவட்ட காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பலியான இந்த 4 பேரின் அடையாளத்தை நிர்வாகம் இன்னும் வெளியிடவில்லை. அதேசமயம் குண்டுவெடிப்பில் பலியான 4 பேரும் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது.

கனடாவில் காணாமல் போன 20,000 இந்திய மாணவர்கள்!

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று உள்ளூர் மக்கள் சந்தேகிக்கின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அந்த பகுதியில், அபாயகரமான தொழிற்சாலை நடத்த அனுமதி எப்படி வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதே நேரத்தில், பட்டாசு ஆலைக்கு தேவையான உரிமம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

2023 ஆம் ஆண்டில், கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள எக்ராவில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கும்பமேளா: முதலீடே இல்லாமல் நாளொன்றுக்கு ரூ. 4,000 சம்பாதிக்கும் இளைஞர்!

மகா கும்பமேளாவில் முதலீடு செய்யாமல் நாளொன்று ரூ. 4,000 வரை இளைஞர் ஒருவர் சம்பாதித்து வருகிறார்.திருவிழா நடைபெறும் இடங்களில் உணவு, விளையாட்டு பொருள்கள், அலகு சாதனப் பொருள்கள் விற்கும் கடைகள் போட்டு விய... மேலும் பார்க்க

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 வங்கதேசத்தினர் கைது

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 வங்கதேசத்தினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாகக் கூறி நான்கு பெண்கள் உள்பட ஏழு வங்கதேசத்தினர் மும்ப... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயிலில் புதிய வசதி: ரயில்வே அறிவிப்பு

வந்தே பாரத் ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது உணவைத் தேர்வு செய்யாவிட்டாலும் ரயிலில் ஏறிய பிறகும் உணவு பெறும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.வந்தே பாரத் ரயிலில்... மேலும் பார்க்க

500 பயிற்சி ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் இன்ஃபோசிஸ்!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், அதன் மைசூர் வளாகத்தில் பணியாற்றி வரும் சுமார் 500 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர்கள் அனைவரும் கடந்த 2024ஆம் ஆண்டு அக... மேலும் பார்க்க

அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 12, 13 ஆம் தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவிருப்பதாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஷ்ரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து விக்ரம் மிஷ்ரி கூறுகையில், “பிரதமர்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்: கோபால் ராய்

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஒருநாளே உள்ள நிலையில். ஆம் ஆத்மி கட்சி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் ராய் தெரிவித்தார். தில்ல... மேலும் பார்க்க