செய்திகள் :

`அன்று தோத்துப்போன பிசினஸ்மேன்; இப்ப முதல் விருது..!’ - நெகிழும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன்

post image

சீரியல்களில் நடிக்க வந்து பல ஆண்டுகளுக்குப்  பிறகு முதல் விருதை வாங்கியிருக்கிரார் நடிகர் ரவிச்சந்திரன். அவரிடம் வாழ்த்துச் சொல்லிப் பேசினோம்.

''சொந்த ஊர் கும்பகோணம். அப்பா, தாத்தான்னு எந்தத் தலைமுறையிலயும் நடிப்பு வாசனை கிடையாது. சொந்தமா மசாலா கம்பெனி நடத்தி வ்ந்தேன். நல்ல போன பிசினஸ்ல திடீர்னு சறுக்கல். கம்பெனியை மூட வேண்டியதாகிடுச்சு. பிறகு கிடைச்ச வேலைகளையெல்லாம் செஞ்சேன். அப்படித்தான் தெரிஞ்ச ஒருத்தர் மூலமா சென்னைக்கு வந்தப்ப டிவி ஆட்கள் சிலருடைய பழக்கம் உண்டாச்சு.

அந்தப் பழக்கம்தான் நடிகனாக்குச்சு. அப்ப எனக்கு வயசு நாற்பதைத் தொட்டுடுச்சு. எல்லா வேலைகளையும் விருப்பத்தோடயே செய்ததைப் போலத்தான் நடிப்பையும் செய்தேன். ஆனா அந்த நடிப்பு என்னை நாலு பேர்கிட்ட அறிமுகப்படுத்தி வச்சது. ஒரு காலத்துல தோத்துப் போன பிசினஸ்மேனா எந்த ஊருல அவமானப்பட்டேனோ அதே சொந்த ஊர் நடிகனா என்னை அவ்வளவு உற்சாகமா வரவேற்றது.

அதனாலேயே நடிப்பை விடக்கூடாதுன்னு கூடுதலா கொஞ்சம் அக்கறையை அதுகிட்டக் காட்டத் தொடங்கினேன்.

'சரவணன் மீனாட்சி' சீரியல் எனக்கு ஓரளவு நல்ல பேரைத் தந்திச்சு. தொடர்ந்து 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் சீசனும் அதே போலத்தான். விஜய் டிவியில  மட்டுமே நடிச்சிட்டிருந்தவனை இன்டஸ்ட்ரி கவனிச்சதோ என்னவோ, ஜீ தமிழ், சன் டிவினு மத்த சேனல் வாய்ப்புகளும் வரத் தொடங்கின.

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் சீசன் முடிந்து இரண்டாவது பார்ட் லயும் கூப்பிட்டாங்க. எல்லாம் சரி, வெளியில் எங்காச்சும் போனா நாலு பேர் அடையாளம் கண்டு வந்து பேசல்லாம் செய்றாங்க. ஆனா நடிக்க வந்து பல வருஷம் ஆகியும் விருதுன்னு ஒண்ணு கூட வாங்காமல் இருந்தேன். அது எனக்குள் சின்ன வருத்தம். இருந்தாலும் ஆடியன்ஸ் நாலு பேர் என்கிட்ட வந்து 'நல்லா நடிக்கறீங்க சார்'னு சொன்னா அது போதும்னு நினைச்சுக்குவேன்.

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன்

இந்த நிலையில்தான் போன வருஷம் விகடன் சின்னத்திரை விருது வந்தது. அதுல நாமினேஷன் பட்டியலில் என் பெயர் வந்தது. விருது கிடைக்காத போதும், அதுவே எனக்குப் பெரிய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தந்தது. இப்ப 'மருமகள்' தொடருக்கு விருது கிடைச்சிருக்கு. என் வாழ்க்கையில் நடிப்புக்குனு கிடைச்ச முதல் விருது. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

முன்னாடி ஒரு சமயத்துல விஜய் சார் படம் ஒண்ணுல கமிட் ஆகி மேக் அப் எல்லாம் போட்டு ஷூட்டிங் ஸ்பாட் வரை போயிட்டு கடைசி நிமிஷத்துல ரிஜெக்ட் ஆனேன். அதை ஒரு பெரிய அவமானமா நினைச்சேன். இப்ப நடிச்சு ஒரு விருதை வாங்கறே ன்னு நினைக்கிறப்ப, நாம பாட்டுக்கு நம்ம வேலையைச் சரியாகச் செய்து விட்டு போயிட்டே இருந்தா கிடைக்கும் அங்கீகாரம் கிடைக்காமல் போகாதுங்கிறதைத் தெரிஞ்சுகிட்டேன்'' என மகிழ்கிறார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Serial Update: 'ரீல் ஜோடி' டு 'ரியல் ஜோடியான' மெளனராகம் பிரபலங்கள்; கர்ப்பமானதை அறிவித்த ஸ்ரித்திகா!

விஜய் டிவியில் ஒளிபரப்பான `மெளனராகம் 2'வில் வருண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர்சல்மானுள்ஃபாரிஸ் (Salmanul Faris). ஜீ கேரளம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிழிஇரண்டிலும் (Mizhirandilum) தொடரில் சஞ்சய்... மேலும் பார்க்க

`பாக்கியலட்சுமி' இனியாவின் டான்ஸ்... உருகிய ரீல் அம்மா.. கடுப்பில் ரியல் அம்மா

'பாக்கியலட்சுமி' சீரியலில்கோபி-பாக்யா தம்பதியின் மகள் இனியாவாக நடித்து வரும் நேகாவின் டான்ஸ் போட்டி கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பலத்த ட்ரோலுக்கு ஆளாகியிருப்பதில் ரொம்பவே நொந்து போயிருக்கிறார... மேலும் பார்க்க

Siragadikka aasai : டிராஃபிக் போலீஸ், சீதா இடையே உருவாகும் நட்பு - வம்பு செய்யும் முத்து

சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில் ரவி-ஸ்ருதியின் திருமண நாள் கொண்டாட்டம் மகிழ்வுடம் நடந்து முடிந்தது. வீட்டில் நடக்கும் குடும்ப நிகழ்வுகளில் பாட்டு கச்சேரி வைப்பது எதற்காக என்பது நேற்றைய எபிசோ... மேலும் பார்க்க

நீ நான் காதல் : "அவருக்கும் இந்த முடிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!" - வதந்தி குறித்து தனுஷிக்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `நீ நான் காதல்'.இந்தத் தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் விஜே தனுஷிக். அவர் திடீரென அந்தத் தொடரில் இருந்து விலகுவதை அவருடைய ரசி... மேலும் பார்க்க

`ஹேப்பியா இருக்கா புது பாய் ப்ரண்டோடு; தற்குறி நான் அவளின் நினைவோடு'- என்ன சொல்கிறார் தாடி பாலாஜி?

நடிகர் தாடி பாலாஜி வைத்திருக்கும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஒருவித பரபரப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறது.திரைப்பட நடிகரும், விஜய் டிவி காமெடி நிகழ்ச்சிகள் மூலம் ரொம்ப... மேலும் பார்க்க

முதல் நாள் ராத்திரி விருது; விடிஞ்சா மகள் பிறக்கிறா... - அஸ்வின் கார்த்திக் செம ஹேப்பி

'சரவணன் மீனாட்சி' 'வானத்தைப் போல' 'அரண்மனைக் கிளி', 'குலதெய்வம்' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் அஸ்வின் கார்த்திக். ஆரம்பத்தில் தொகுப்பாளராக டிவியில் நுழைந்து பிறகு சீரியல் பக்கம் வந்தவர்.சீரியல்க... மேலும் பார்க்க