செய்திகள் :

`ஹேப்பியா இருக்கா புது பாய் ப்ரண்டோடு; தற்குறி நான் அவளின் நினைவோடு'- என்ன சொல்கிறார் தாடி பாலாஜி?

post image
நடிகர் தாடி பாலாஜி வைத்திருக்கும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஒருவித பரபரப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

திரைப்பட நடிகரும், விஜய் டிவி காமெடி நிகழ்ச்சிகள் மூலம் ரொம்பவே பரிச்சயமானவருமான தாடி பாலாஜி ஆரம்பத்தில் தன்னை திமுக அனுதாபியாகக் காட்டிவந்தார். பிறகு நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததும் அவர் பக்கம் சாய்ந்தார். தவெக பொதுச் செயலாளர் ஆனந்தை நேரில் சந்தித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் தொடங்கினார்.

மேலும் விஜய்யையும் அவரது கட்சியையும் விமர்சிப்பவர்களைக் கொஞ்சம் கடுமையான தொனியில்கூட பதிலடி கொடுத்தார். தமிழக வெற்றிக் கழகம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழிசை சௌந்தர் ராஜன் கூறிய சில கருத்துகளுக்குப் பதிலடி கொடுத்தபோது, 'இதற்கு முன் புதுச்சேரியில் கவர்னராக இருந்ததால் விஜய் பேச்சை தண்ணீரில்தான் எழுத வேண்டுமெனச் சொல்கிறார்போல’ எனச் சொன்னார்.
'தவெகவில் சேர்ந்து விட்டீர்களா?' என முன்பு நாம் கேட்ட போது, 'புஸ்ஸி ஆனந்த் திடீர்னு ஒருநாள் கூப்பிட்டார். போனா ‘பாலாஜியை மாநாட்டுக்கு ஒர்க் பண்ணச் சொல்லுங்க’னு விஜய் சொல்லியிருக்கார்னு சொன்னார். அப்ப இருந்தே வேலைகளைத் தொடங்கிட்டேன்' எனச் சொல்லியிருந்தார்.

தாடி பாலாஜி whatsapp Status

கூடவே விஜய்யின் உருவத்தை நெஞ்சில் டாட்டு குத்தி வீடியோ வெளியிட்டார். 'டாட்டு குத்தியபோது 7 மணி நேரம் வலியைத் தாங்கிட்டிருந்தேன்' எனச் சொல்லியிருந்த அந்த வீடியோ அப்போது வைரலானது நினைவிருக்கலாம்.
இந்தச் சூழலில் தற்போது தவெகவில் பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர். ஆனால் தாடி பாலாஜிக்கு இதுவரை எந்தவொரு பொறுப்பும் அறிவிக்கப்படவில்ல்லை. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக  ஆனந்த் ஆதவ் அர்ஜுனாவை வரவேற்கும் வீடியோவையும் கூடவே விஜய் பெயரைத் தன் நெஞ்சில் பச்சை குத்தியதையும் ஒப்பிட்டு வைத்திருக்கிறார்.
இந்த மீம் தாடி பாலாஜியின் நண்பர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நீ நான் காதல் : "அவருக்கும் இந்த முடிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!" - வதந்தி குறித்து தனுஷிக்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `நீ நான் காதல்'.இந்தத் தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் விஜே தனுஷிக். அவர் திடீரென அந்தத் தொடரில் இருந்து விலகுவதை அவருடைய ரசி... மேலும் பார்க்க

முதல் நாள் ராத்திரி விருது; விடிஞ்சா மகள் பிறக்கிறா... - அஸ்வின் கார்த்திக் செம ஹேப்பி

'சரவணன் மீனாட்சி' 'வானத்தைப் போல' 'அரண்மனைக் கிளி', 'குலதெய்வம்' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் அஸ்வின் கார்த்திக். ஆரம்பத்தில் தொகுப்பாளராக டிவியில் நுழைந்து பிறகு சீரியல் பக்கம் வந்தவர்.சீரியல்க... மேலும் பார்க்க

Siragadikka aasai : ஒன்று சேர்ந்த வில்லிகள், 2k கிட்ஸ் மனநிலையை பிரதிபலிக்கும் ஸ்ருதி

சிறகடிக்க ஆசை சீரியலின் நேற்றைய எபிசோட் முழுவதும் விஜயா நடனம் ஆடிக்கொண்டே இருந்தார். சும்மா சொல்லக்கூடாது அவரது நடன அசைவுகளின் நளினம் தாண்டவம் ஆடியது. பார்வதியும் விஜயாவுக்கு நிகராக நடனமாடி அசத்தினார்... மேலும் பார்க்க

`இதிகாசம் இதுதானா இவளோடு நடந்தேனா...' - தொகுப்பாளர் சங்கீதாவைத் திருமணம் செய்த அரவிந்த் செய்ஜு

`கனா காணும் காலங்கள்' வெப் சீரிஸில் மலர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சங்கீதா.தொகுப்பாளினியாக வலம் வந்தவர் சன் டிவியில் ஒளிபரப்பான `அழகு' தொடரின் மூலம் நடிகையாக பலரையும் மிரட்டியிருந்தார். கனா சீர... மேலும் பார்க்க

Siragadikka aasai : ரோகிணி எஸ்கேப், ஆனால் ஸ்ருதி எங்கே?

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தான் முத்துவின் மொபைலை திருடி சிட்டியிடம் கொடுத்து வீடியோவை வெளியே விட உதவினார் என்னும் விஷயம், வீட்டில் அனைவருக்கும் தெரிய வரப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆன... மேலும் பார்க்க