தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்து 1.55 கோடி பேர் நீக்கம்!
சஞ்சு சாம்சன் இப்படியே தொடர்ந்து ஆட்டமிழந்தால்... அஸ்வின் கூறுவதென்ன?
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடியது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அண்மையில் நிறைவடைந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. டி20 தொடரை இந்திய அணி வென்ற போதிலும், சஞ்சு சாம்சனுக்கு இந்த டி20 தொடர் சிறப்பானதாக அமையவில்லை.
இதையும் படிக்க: இலங்கை தொடரில் விளையாடாமல் தாயகம் திரும்பும் சாம் கான்ஸ்டாஸ்; காரணம் என்ன?
கடந்த ஆண்டு அதிரடியாக விளையாடி சதங்கள் விளாசிய சஞ்சு சாம்சன், இங்கிலாந்துக்கு எதிராக பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய சஞ்சு சாம்சன், வெறும் 51 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இப்படியே தொடர்ந்து ஆட்டமிழந்தால்...
இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக ஒரே மாதியான ஷாட்டினை தேர்வு செய்து சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். இப்படியே தொடர்ச்சியாக ஆட்டமிழந்தால், அவரது மனமே அவரை குழப்பும் விதமாக செயல்படும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆட்டமிழந்தது போன்று தொடர்ச்சியாக சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தால், அவரது மனமே அவரை குழப்பும் விதமாக செயல்படும். பந்துவீச்சாளர் குறிப்பிட்ட விதத்தில் பந்துவீசுகிறார். அவர் வீசும் ஒரே மாதிரியான பந்தில் நான் தொடர்ந்து ஆட்டமிழக்கிறேன். நான் ஏன் அவ்வாறு ஆட்டமிழக்கிறேன்.
இதையும் படிக்க: 100-வது போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் இலங்கை வீரர்!
பந்துவீச்சாளர் நன்றாக பந்துவீசுகிறாரா அல்லது என்னுடைய பேட்டிங்கில் குறை உள்ளதா? இது போன்ற பந்துவீச்சுக்கு ஏற்றவாறு என்னுடைய ஆட்டத்தை மாற்றிக் கொள்ள முடியுமா? இது போன்ற பல கேள்விகள் எழும். ஒரு முறை இது போன்று பல கேள்விகள் உருவாகிவிட்டால், நாம் நன்றாக விளையாடுவதை அது கடினமாக்கிவிடும் என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியின்போது, சஞ்சு சாம்சனுக்கு கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அடுத்த ஒரு மாதத்துக்கு அவரால் கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.