செய்திகள் :

வழுக்கை தலையுடன் திருமணம் செய்த மணப்பெண்... இணையவாசிகளை கவர்ந்த Emotional Video!

post image

பொதுவாக மணமக்கள் திருமணத்திற்கு முன்பு தங்களை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு விஷயங்களை செய்வார்கள். அடுத்தவர்கள் பிரமிக்கும் அளவிற்கு அழகாக இருக்க வேண்டுமென உடை, நகை அனைத்தையும் பார்த்து பார்த்து வாங்குவார்கள். ஆனால் இங்கு மணப்பெண் ஒருவர் தனது வழுக்கை தலையுடன் திருமணம் செய்து கொண்டுள்ள வீடியோ இணையவாசிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது.

”முடிதான் பெண்களுக்கு அழகு” என்ற வாக்கியத்தை தகர்த்தெறிந்தும் வகையில் வழுக்கை தோற்றத்தில் வந்து திருமணம் செய்து கொண்டதற்கான காரணம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நீஹர் சச்தேவ் என்ற பெண் தான் வழுக்கை தலையுடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு அலோபீசியா அரேட்டா என்ற குறைபாடு உள்ளது. இந்த குறைபாடு இருந்தால் உடலின் சில அல்லது அனைத்து பகுதியிலிருந்தும் முடி உதிர்தல் ஏற்படுமாம். இதனை ஸ்பாட் வழுக்கை என்றும் அழைக்கின்றனர்.

திருமணத்தின் போது நீஹர் தனது வழுக்கையை மறைக்க விக் பயன்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் அதே தலையுடன் திருமணம் செய்துக்கொண்டதுதான் இணையவாசிகளை பெரிதும் ஈர்த்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பலரையும் நெகிழ செய்துள்ளது.

அலோபீசியா அரேட்டா பற்றிய சில தகவல்கள்

இந்த குறைபாடு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்

இது பரம்பரை நோயாகவும் இருக்கலாம்

இது தொற்றக்கூடியதல்ல

இதற்கு மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Japan: வேண்டுமென்றே தவறு செய்து, மீண்டும் மீண்டும் ஜெயிலுக்கு போகும் முதியவர்கள்! - பின்னணி என்ன?

ஜப்பானில் வசிக்கும் வயதானவர்கள் வேண்டுமென்றே குற்றங்களைச் செய்துவிட்டு சிறைகளில் வாழ்வதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.ஜப்பானில் டோக்கியோவிற்கு வடக்கே பெண்க... மேலும் பார்க்க

`உப்புமாவுக்கு பதில் பிரியாணி தரணும்'- சிறுவனின் கோரிக்கையும் கேரள அரசின் பதிலும்

அங்கன்வாடியில் உப்புமாவிற்கு பதில் பிரியாணியும் சிக்கனும் வழங்க வேண்டும் என்று கேட்கும் குழந்தையின் வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து, அதை கேரளா அரசு பரிசீலனை செய்வதாகத் தெரிவித்திருக்கிறது.கேரளாவில் அங்கன்... மேலும் பார்க்க

Divorce Temple: திருமண உறவை முறித்து கொள்ள தம்பதிகள் செல்லும் `விவாகரத்து கோயில்'- எங்கே இருக்கிறது?

கோயிலுக்குச் சென்றால் திருமணம் நடக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு கோயிலுக்குச் சென்றால் விவாகரத்து நடக்குமாம். ஜப்பானில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு "விவாகரத்து கோயில்" என்று பெயர்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் துறவறம் பூண்ட நடிகை மம்தா குல்கர்னி அகாரா மடத்தில் இருந்து நீக்கம்..! பின்னணி என்ன?

பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு வெளிநாட்டில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பிய பிறகு உத்தரப்பிரதேசத்தில் நடந்து வர... மேலும் பார்க்க

உலகிலேயே முதன்முறையாக `குடித்துவிட்டு ட்ரோன் இயக்கிதற்காக ரூ.2.5 லட்சம் அபராதம்' - எங்கே?

குடித்துவிட்டு கார், பைக் என எந்த வாகனத்தையும் ஓட்டி ஃபைன் கட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், ஸ்வீடனில் ஒரு குடிமகன் குடித்துவிட்டு ட்ரோன் இயக்கியதற்காக அபராதம் கட்டியுள்ளார், அதுவும் 2,52,194 ரூப... மேலும் பார்க்க

China: ``எவ்வளவு வேண்டுமோ அள்ளிக்கொள்ளுங்கள், ஆனால் ஒரு நிபந்தனை'' -70 கோடி போனஸ் வழங்கிய நிறுவனம்!

சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆண்டு முடிவு போனஸாக அதன் ஊழியர்களுக்கு 70 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஆனால் ஒரே ஒரு நிபந்தனையுடன்.ஊழியர்கள் கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் தங்களால் எவ்வளவு பணத்தை எண்ண முடியு... மேலும் பார்க்க