செய்திகள் :

LGBTQIA: ``பாலின அடையாளக் கோளாறு'' -விமர்சித்த மருத்துவ ஆணையம்; கண்டனம் தெரிவித்த உயர்நீதி மன்றம்!

post image

LGBTQIA+ சமூகத்தினரை 'பாலின அடையாளக் கோளாறு' உள்ளவர்கள் என்று தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிட, அது தற்போது விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது. தன்பாலின ஈர்ப்பு சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான ஒரு வழக்கு விசாரணை நேற்றைய தினம் நடந்தது. அப்போது, 'LGBTQIA+ மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை அங்கீகரிக்கவும், அவர்கள் தொடர்பான மருத்துவக் கல்வி பாடத்திட்டத்தை மறுசீரமைக்க வேண்டும்' என்பது தொடர்பான விவகாரத்தில், LGBTQIA+ சமூகத்தினரை 'பாலின அடையாளக் கோளாறு' உள்ளவர்கள் என தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதை விமர்சித்த சென்னை உயர்நீதிமன்றம், 'பாலின அடையாளக் கோளாறு என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தியிருப்பது உங்கள் மனநிலையை காட்டுகிறது. கோளாறு என்று சொன்னால் அனைத்தும் கோளாறுதான். LGBTQIA+ சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கோளாறு இருப்பதாக கூற இயலாது. இயற்கை அவர்களை அப்படி உருவாக்கியுள்ளது' என குறிப்பிட்டுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம்

'ஓரினச்சேர்க்கை மற்றும் பாலியல் தொடர்பான பாடங்கள் பள்ளிகளிலே கற்பிக்கப்படுவதால், மருத்துவப் பாடத்திட்டத்தில் அவை ஒரு பகுதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை' என தேசிய மருத்துவ ஆணையம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது. இக்கூற்றால் அதிருப்தி அடைந்த சென்னை உயர்நீதிமன்றம், 'தேசிய மருத்துவ ஆணையமே கற்பிக்கத் தயங்கினால், இதைவிட அறிவியல் மனப்பான்மையில் மிகவும் பின்தங்கிய பள்ளிகள் இவற்றை சிறப்பாக எதிர்கொள்ளும் என எவ்வாறு எதிர்பார்க்க இயலும்' என கேள்வி எழுப்பியது. தவிர, திருநங்கைகள் மற்றும் LGBTQIA+ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நலனுக்காக இரண்டு கொள்கைகளை முன்மொழிந்துள்ள தமிழக அரசிடம், ஒரே மாதிரியான கொள்கையை அமல்படுத்துவதில் ஏதேனும் சவால்கள் இருந்தால் அறிக்கை சமர்ப்பிக்கவும் கோரியது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்த வழக்கறிஞர் சாந்தகுமாரி, "நீதிமன்றம் சரியாகவே விமர்சித்திருப்பதாக நினைக்கிறேன். ஏனெனில், பிறவியிலேயே உடலில் நடைபெறும் மாற்றங்களை 'கோளாறு' என குறிப்பிடுவது பிறவியே குறைபாடு என குறிப்பிடுவதாகும். LGBTQIA+ சமூகத்தினருக்கும் பிற மனிதர்களைப் போல் சம அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என அனைவரும் போராடி வரும் நிலையில், பாடமாக எடுக்க வேண்டியவற்றை குறைபாடு போல சுட்டிக்காட்டும் தேசிய மருத்துவ ஆணையத்தின் செயல்பாட்டை தவறென சொல்லாமல் எவ்வாறு சொல்வது? திருநங்கை, திருநம்பி என செந்தமிழில் சிறப்புப்பெயர்களால் குறிப்பிட்டு வருகிறோம். இத்தகைய மக்கள் பல வருடங்களாக நம்மோடு வாழ்ந்து வந்துள்ளனர் என நம் வரலாறே சொல்கிறது. ஓரினச்சேர்க்கையாளராக இருப்பது அவரவர் விருப்பம். பாலின உணர்வுகள் இயற்கையானவையே... அதை பிறழ்வு அல்லது குறைபாடு என குறிப்பிட இயலாது.

வழக்கறிஞர் சாந்தகுமாரி!

மாணவ மாணவியர் தங்களது உறுப்புகள் மற்றும் அவற்றின் செயல்பாடு குறித்து அறிந்து கொள்வது அடிப்படை. அத்தகைய அடிப்படை பாலுணர்வு குறித்த கல்வியே வழங்கப்படாத நிலையில், LBGTQIA+ சமூகத்தினரின் பாலுணர்வு குறித்து பேச எவரும் முன்வரமாட்டார்கள். இதை குறைபாடு, தவறு என தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிட்டதுபோல் தான் கூறுவர்" எனவும் கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

USA: சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் திருப்பி அனுப்பும் அமெரிக்கா... இந்தியாவின் முடிவு என்ன?

தேர்தல் பிரச்சாரத்தின் போது, "வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும், சட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்படும், பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது" என ட்ரம்ப் தெரி... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் - சர்ச்சைக்கு யார் காரணம்? |ஈரோடு கிழக்கு | Parliament | BJP | DMK Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* இன்று உலகப் புற்றுநோய் தினம்!* “இரும்பின் காலம் குறித்த ஆவணப் படத்தை அவையில் ஒளிபரப்புங்கள்” -சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு* “கும்பமேளாவுக்குச் சென்ற மக்களை ஒன்றிய அரசு க... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: நீதிமன்ற அனுமதியுடன் மதுரையில் இந்து முன்னணி ஆர்பாட்டம்..

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் சம்பந்தமாக இந்து முன்னணி ஆர்பாட்டம் நடத்த உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை சில நிபந்தனைகளுடன் உத்தரவிட்டுள்ளது.திருப்பரங்குன்றம்சில மாதங்களுக்கு முன் திருப்பரங்குன்றம் மலை மீ... மேலும் பார்க்க

கடலூர்: ``மரங்களை வெட்டி வீழ்த்துவது கண்டிக்கத்தக்கது!'' – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டம்

தைப்பூசத்தையொட்டி வடலூர் சத்திய ஞானசபையில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது இந்து சமய அறநிலையத்துறை. அப்போது பெருவெளியில் இருக்கும் மரங்கள் வெட்டப்படுவதாக சர்ச்சை எழுந்த... மேலும் பார்க்க

America: ``ட்ரம்பா - எலான் மஸ்கா" அமெரிக்காவின் அதிபர் யார்? - விமர்சனங்களும் பின்னணியும்!

எலான் மஸ்க் - டொனால்ட் ட்ரம்ப் நட்புஉலகளவில் கவனிக்கப்பட்ட தேர்தல்களில் ஒன்று அமெரிக்க அதிபர் தேர்தல். ஆரம்பத்தில் ஜோ பைடனா - டொனால்ட் ட்ரம்ப்பா என்றுத் தொடங்கிய தேர்தல் களம், ஜோ பைடனிடமிருந்து கமலா ஹ... மேலும் பார்க்க

``மாலை 6 மணிக்கு பிறகு 76 லட்சம் பேர் வாக்களித்தது எப்படி?'' -தேர்தல் கமிஷனிடம் ஐகோர்ட் கேள்வி

மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால், இந்த வெற்றியை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. தேர்தலில... மேலும் பார்க்க