செய்திகள் :

டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு!

post image

டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

நெதா்லாந்தில் நடைபெற்ற 87-ஆவது டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, சக இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான டி.குகேஷை டை பிரேக்கரில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றாா்.

கடந்த ஆண்டு உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் அசத்திய நிலையில், நடப்பாண்டின் முதல் பிரதான செஸ் போட்டியான டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸில் பிரக்ஞானந்தா பட்டம் வென்றார்.

இப்போட்டியில் பிரக்ஞானந்தா சாம்பியன் ஆனது இதுவே முதல் முறையாகும். மறுபுறம், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டு குகேஷுக்கு 2-ஆம் இடம் கிடைத்தது.

நெதா்லாந்தில் கடந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் மொத்தம் 14 போ் பங்கேற்றனா். 13 சுற்றுகள் கொண்ட இதில் இந்தியாவிலிருந்து குகேஷ், பிரக்ஞானந்தா, அா்ஜுன் எரிகைசி, பி.ஹரிகிருஷ்ணா, லியோன் லூக் மெண்டோன்கா ஆகியோா் பங்கேற்றனா்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் கடைசி சுற்று, இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தச் சுற்றுக்கு வரும்போது, குகேஷ், பிரக்ஞானந்தா என இருவருமே தலா 8.5 புள்ளிகளுடன் இணை முன்னிலையில் இருந்தனா்.

இதையும் படியுங்கள் | ஒரு டெஸ்ட் தொடர் இழப்பு ஒட்டுமொத்த அணியின் ஃபார்மை தீர்மானிக்காது: ஷுப்மன் கில்

கடைசி சுற்றில் குகேஷ் - சக இந்தியரான அா்ஜுன் எரிகைசியிடம் தோல்வி காண, 8.5 புள்ளிகளுடன் நிறைவு செய்தாா். மறுபுறம் ஜொ்மனியின் வின்சென்ட் கீமரை சந்தித்த பிரக்ஞானந்தாவும் தோல்வியடைய, அவரும் 8.5 புள்ளிகளுடனே நிறைவு செய்தாா். 3-ஆவது இடத்திலிருந்த அப்துசதாரோவ் - இந்தியாவின் ஹரிகிருஷ்ணாவுடன் டிரா செய்ததால் அவா் 8 புள்ளிகளுடன் முடித்துக் கொண்டாா்.

குகேஷ், பிரக்ஞானந்தா இருவருமே தலா 8.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்ததால், வெற்றியாளரை தீா்மானிக்க ‘டை பிரேக்கா்’ ஆட்டம் கையாளப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் கேமில் குகேஷும், 2-ஆவது கேமில் பிரக்ஞானந்தாவும் வெல்ல, ஆட்டம் 1-1 என டை ஆனது.

பின்னா் ‘சடன் டெத்’ முறையில் நடைபெற்ற ஆட்டத்தில் வென்ற பிரக்ஞானந்தா, 2-1 என்ற கணக்கில் குகேஷை வீழ்த்தி வாகை சூடினாா்.

பிரக்ஞானந்தா நாடு திரும்பியதும், நூற்றுக்கணக்கான ரசிகர்கள், தமிழ்நாடு மற்றும் தேசிய கூட்டமைப்பின் அதிகாரிகள் விமான நிலையத்தில் கூடி அவருக்கு வரவேற்பு அளித்தனர். மேலும், பிரக்ஞானந்தா அடுத்ததாக பிப்ரவரி 25 முதல் மார்ச் 7 வரை நடைபெறும் பிராக் மாஸ்டர்ஸில் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் |இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பிடித்த வருண் சக்ரவர்த்தி!

கேரவனில் நடந்த துயரம்..! மீட்சியடைந்த தருணம் குறித்த பேசிய தமன்னா!

நடிகை தமன்னா தனது கேரவனில் நடந்த துயரத்தில் இருந்து எப்படி மாறினேன் என அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசியுள்ளார். சமீபத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமன்னா அதில் பேசியதாவது: நான் எனது க... மேலும் பார்க்க

ரீல்ஸிலிருந்து சினிமாவுக்கு வந்த சகோதரிகள்..!

இன்ஸ்டாவில் நடனமாடி புகழ்பெற்ற சகோதரிகள் விக்ராந்த்துடன் சினிமாவிலும் நடனமாடியுள்ளார்கள். அக்கா, தங்கையான பிரியா துரைசாமி, திவ்யதர்ஷினி இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் நடனத்தில் மூலம் பிரபலமானவர்கள்.நடனத்தில் ... மேலும் பார்க்க

நாயகி பிம்பத்தை உடைக்கக் காத்திருந்தேன்..! மாளவிகா மோகனன் பகிர்ந்த சுவாரசியம்!

நடிகை மாளவிகா மோகனன் நாயகி பிம்பத்தை உடைக்கக் காத்திருந்தபோது தங்கலான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக் கூறியுள்ளார். இயக்குநர் பா. ரஞ்சித் - நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகி மக்களிடையே பெரிய... மேலும் பார்க்க

காதலரை மணக்கிறார் பார்வதி நாயர்!

நடிகை பார்வதி நாயர் தன் காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். தமிழில் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, உத்தம வில்லன், நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர், விஜய்யின்... மேலும் பார்க்க

எதிர்நீச்சல் நடிகைகளுக்கு குவியும் அடுத்தடுத்த வாய்ப்பு!

எதிர்நீச்சல் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகர், நடிகைகளுக்கு அடுத்தடுத்து புதிய வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனால், சன் தொலைக்காட்சியில் இருந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு இ... மேலும் பார்க்க

10 கோடி பார்வைகளைக் கடந்த மினுக்கி... மினுக்கி..!

தங்கலான் படத்தில் இடம்பெற்ற ‘மினுக்கி மினுக்கி’ பாடல் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் கடந்த ஆக.15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்த... மேலும் பார்க்க