தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்து 1.55 கோடி பேர் நீக்கம்!
காதலரை மணக்கிறார் பார்வதி நாயர்!
நடிகை பார்வதி நாயர் தன் காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.
தமிழில் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, உத்தம வில்லன், நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர், விஜய்யின் கோட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், பார்வதி நாயர் தன் காதலரும் தொழிலதிபருமான சென்னையைச் சேர்ந்த ஆஷ்ரித் அசோக் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.
இதையும் படிக்க: பராசக்தி படத்தில் உன்னி முகுந்தன்?
இன்ஸ்டாகிராமில் நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பகிர்ந்த பார்வதி, “என்றைக்குமான உண்மையான ஒன்றை கண்டுபிடித்தேன். ஒவ்வொரு நாளும் எனக்கு ஆதரவாக இருந்தவருக்கு இனி வாழ்நாளுக்குமான அன்பையும் நம்பிக்கையையும் அளிக்க சரி என சொல்லியிருக்கிறேன்.” என்று மகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
இவரின் திருமண தேதி குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.