செய்திகள் :

சென்னை: நடுரோட்டில் சிதறிக் கிடந்த தோட்டாக்கள்; பாதுகாப்பு படை வீரரிடம் ஒப்படைப்பு..!

post image

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம், மோதிலால் நகரைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சிக்னல் அருகே சென்றபோது அங்கு ஏ.கே.47 துப்பாக்கியின் உதிரிபாகம், 30 தோட்டாக்கள் கிடந்தன. உடனே அவற்றை எடுத்த சிவராஜ், அருகில் உள்ள ராமாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதன்பேரில் ராமாபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில், பூந்தமல்லி கரையான்சாவடியில் உள்ள சி.ஆர்.பி.எஃப் முகாமில் பணியாற்றும் ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர் அன்னப்பு லட்சுமி ரெட்டி என்பவர், தன்னுடைய துப்பாக்கியில் பொருத்தப்பட்டிருந்த தோட்டாக்களுடன் கூடிய மெகஸின் தவறி விழுந்துவிட்டதாக ராமாவரம் போலீஸாரிடம் தெரிவித்தார்.

துப்பாக்கி

உடனடியாக ராமாபுரம் போலீஸார் பாதுகாப்பு படை வீரர் அன்னப்பு லட்சுமி ரெட்டியிடம் விசாரணை நடத்தினர். அதோடு அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அதில் பாதுகாப்பு படை வீரர் அன்னப்பு லட்சுமி ரெட்டி வாகனத்தில் செல்லும் போது துப்பாக்கியின் உதிரி பாகம், தோட்டாக்கள் கீழே விழும் காட்சி பதிவாகியிருந்தது. அதை பாதுகாப்பு படை வீரர் அன்னப்பு லட்சுமி ரெட்டி கவனிக்காமல் செல்வதும் பதிவாகியிருந்தது. அதோடு துப்பாக்கியின் உதிரி பாகம், தோட்டாக்களுக்குரிய ஆவணங்களையும் பாதுகாப்பு படை வீரர் அன்னப்பு லட்சுமி ரெட்டி, ராமாபுரம் போலீஸாரிடம் ஒப்படைத்தார். அதை ஆய்வு செய்த பிறகு அவரிடம் சாலையில் கிடந்த துப்பாக்கி உதிரிபாகம், தோட்டாக்களை ராமாபுரம் போலீஸார் ஒப்படைத்தனர்.

சாலையில் துப்பாக்கி, தோட்டாக்கள் சிதறிக் கிடந்த சம்பவம் சிறிது நேரம் பரப்பபை ஏற்படுத்தியது.

கோவை: திருமணம் கடந்த உறவு - மனைவியின் காதலனை கொன்ற கணவன்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல் (56). இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியுடன் திருப்பூர் மாவட்டம... மேலும் பார்க்க

மைசூர் டு குருவாயூர், அரசுப் பேருந்தில் போதை பொருள் கடத்தல்... இளைஞர் சிக்கியது எப்படி?

எம்.டி.எம்.ஏ - என்ற பெயரில் அழைக்கப்படும் ஒருவகை போதைப்பொருளை கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு ரகசியமாக கடத்தும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் போர்வையில் பயணிக்கும் கடத்தல் கு... மேலும் பார்க்க

Karnataka: காது குத்தும் முன் மயக்க ஊசி; 6 மாத குழந்தை பரிதாப மரணம்! - உறவினர்கள் அதிர்ச்சி

கர்நாடகா மாநிலம், சாமராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பொம்மலபுரா மருத்துவமனையில் காது குத்துவதற்கு முன் குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்தியதில் 6 மாத ஆண் குழந்தை மரணமடைந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஹங்க... மேலும் பார்க்க

கோவை மருத்துவமனைக்குள் கத்தியுடன் நுழைந்த இளைஞர் - நூலிழையில் உயிர் தப்பிய செவிலியர்

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மருத்துவமனை வளாகத்திள் உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வருகிறார். அங்கு ஒரு இளைஞ... மேலும் பார்க்க

ஜகபர் அலி கொலை வழக்கு: குற்றவாளிகள் 5 பேரையும் 3 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க CBCID-க்கு அனுமதி!

சட்டவிரோத கனிமக் கொள்ளைக்கு எதிராக புகார் கொடுத்த புதுக்கோட்டை மாவட்டம், வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி கடந்த ஜனவரி 17-ம் தேதி அன்று குவாரி உரிமையாளர்களால் சதி திட்டம் தீட்டப்பட்... மேலும் பார்க்க

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்: இளைஞனை சுட்டுப்பிடித்த ராணிப்பேட்டை போலீஸ்!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.நள்ளிரவு 12 மணியளவில், முகமூடி அணிந்து பைக்கில் வந்த அட... மேலும் பார்க்க